நெதர்லாந்து அணிக்கெதிரான நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-NED
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள 8 போட்டிகளிலுமே வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கான வாய்ப்பினை முதல் அணியாக உறுதி செய்திருந்தது.

இந்நிலையில் இந்திய அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணிக்கெதிராக நாளை நவம்பர் 12-ஆம் தேதி பெங்களூரு விளையாட இருக்கின்றனர். இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஒரு போட்டியில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு செல்ல இந்திய அணி காத்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றிகளை குறித்துள்ளதால் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு பென்ச்சில் அமர்ந்திருக்கும் சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் கடந்த போட்டியின் போது ரோகித் சர்மா அளித்த அறிக்கையில் : அணியில் தற்போது தேவையில்லாமல் மாற்றங்கள் நிகழாது என்றும் அணியில் விளையாடும் அனைவருமே சிறப்பாக விளையாடுவதால் அவர்களே தொடர்ந்து விளையாடுவார்கள் என்று அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதன்படி பார்க்கையில் கட்டாயம் கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணி தான் நெதர்லாந்து அணிக்கான போட்டியில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி ஒரு அணியாக நல்ல நம்பிக்கையுடன் சொல்வார்கள் என்பதால் இந்திய அணியில் மாற்றம் பெரிதாக இருக்காது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 2023 ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக் இந்திய வரலாற்றின் பெஸ்ட்ன்னு சொல்ல முடியாது.. கங்குலி ஓப்பன்டாக்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) முகமது ஷமி, 9) குல்தீப் யாதவ், 10) ஐஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement