2023 ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக் இந்திய வரலாற்றின் பெஸ்ட்ன்னு சொல்ல முடியாது.. கங்குலி ஓப்பன்டாக்

Sourav Ganguly 3
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தங்களுடைய முதல் 8 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறது.

சொல்லப்போனால் இந்த வெற்றிகளில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பும்ரா, சிராஜ், ஷமி, ஜடேஜா, குல்தீப் ஆகிய பவுலர்கள் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை 199 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெறுவதற்கு பங்காற்றிய அவர்கள் நியூசிலாந்துக்கு எதிராகவும் 400 ரன்களை தொடவிடாமல் வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

கங்குலி மறுப்பு:
அதை விட 154/3 என்ற நல்ல நிலைமையில் இருந்த பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டி வரலாற்றில் 8வது முறையாக இந்தியாவை வெற்றி பெற வைத்த பவுலர்கள் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 230 ரன்களை கட்டுப்படுத்தும் போது 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அது போக இலங்கையை வெறும் 55 ரன்களுக்கும் அடித்து நொறுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்காவை 83 ரன்களுக்கும் சுருட்டி இந்தியா பெரிய வெற்றிகளை பெறுவதற்கு பவுலர்கள் தான் முக்கிய காரணமாக இருந்தனர்.

குறிப்பாக ஷமி, சிராஜ், பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்துகளில் எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறார்கள். அதனால் இந்தியாவின் பவுலிங் இரக்கமற்றதாக மாறியுள்ளதாக சோயப் அக்தர் பாராட்டிய நிலையில் பாகிஸ்தானை விட இந்திய பவுலிங் உலகத்தரம் வாய்ந்ததாக இருப்பதாக வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போதைய கூட்டணி இந்திய வரலாற்றின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் கூட்டணி என்று சொல்ல முடியாது என முன்னாள் கேப்டன் சௌரவ் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசிய பின்வருமாறு. “இன்றைய தேதி வரை இது தான் இந்தியாவின் மகத்தான வேகப்பந்து வீச்சு அட்டாக் என்று நான் சொல்ல மாட்டேன். 2003 உலக கோப்பையில் ஆசிஸ் நெஹ்ரா, ஜாகிர் கான், ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோரும் அபாரமாக பந்து வீசினார்கள்”

இதையும் படிங்க: அதை இந்தியாவை பாத்து கத்துக்கோங்க.. பாகிஸ்தான் அணிக்கு ஓப்பனாக அட்வைஸ் செய்த சோயப் மாலிக்

“ஆனால் ஆம் சிராஜ், ஷமி, பும்ரா ஆகியோர் பந்து வீசுவதை பார்ப்பது ஆர்வமாக இருக்கிறது. குறிப்பாக பும்ரா இருக்கும் போது நீங்கள் பெரிய வித்தியாசத்தை பார்க்க முடியும். அதனால் இருபுறமும் அழுத்தம் ஏற்படும் என்பதால் 2 பவுலர்கள் ஜோடியாக விக்கெட்டுகளை எடுப்பார்கள். அதில் பும்ரா சற்று அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அதே போல ஷமி இத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே அணியில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதை தற்போது பாருங்கள்” என்று கூறினார்.

Advertisement