IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நாளை மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இருந்தாலும் இந்த தொடரின் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்பதனால் நாளைய போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைய உள்ளது.

IND vs AUS

- Advertisement -

இதனால் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாட வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய அணியானது மூன்றாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த தோல்வியிலிருந்து மீண்டு வரும் விதமாகவும், தொடரை கைப்பற்றும் விதமாகவும் நான்காவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nathan Lyon Pujara IND vs AUS

இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் இந்த தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்ததை தவிர்த்து புஜாரா மூன்றாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். அவர்களை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனும் இந்த தொடரில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

- Advertisement -

இதனால் அணியில் மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியில் ஒரே ஒரு மாற்றமாக சிராஜிற்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது ஷமி விளையாடுவார் என்று தெரிகிறது. அதனை தவிர்த்து இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs AUS : 4வது போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) கே.எஸ்.பரத், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) ரவிச்சந்திரன் அஷ்வின், 10) முகமது ஷமி, 11) உமேஷ் யாதவ்.

Advertisement