பயிற்சி போட்டியில் வழக்கம் போல் வேலை காட்டிய ரோஹித் சர்மா, அசத்திய விராட் கோலி – மின்னிய மிடில் ஆர்டர்

Practice
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக தற்போது இந்திய அணியானது ஆலூரில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட இந்த பயிற்சி முகாமில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு தற்போது பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டும் இன்றி ஏற்கனவே வீரர்களுக்கு யோ யோ டெஸ்ட்டும் நடத்தப்பட்டு முடிவடைந்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார்கள் என்பதால் இந்த பயிற்சி போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தில் உச்சத்தை தொட்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது வெளியான ஒரு தகவலின் படி : பயிற்சி போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நடைபெற்ற பயிற்சி போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. அதில் இந்திய அணி வீரர்கள் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.

ரோகித் சர்மா வழக்கம் போலவே நான்கு பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தது வருத்தம் அளிக்கும் விடயமாக மாறியுள்ளது. இருந்தாலும் அவரை தவிர்த்து விளையாடிய நான்கு பேட்ஸ்மேன்களுமே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதன்படி மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் 35 பந்துகளில் 52 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று மூன்றாவது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி 123 பந்துகளை சந்தித்து தனக்கே உரிய வழக்கமான பாணியில் முதலில் மெதுவாக அடி பின்னர் அதிரடியாக ரன்களை குவித்து 160 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளார். அவரது இந்த பார்ம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை சேர்க்கும் என்று கூறலாம்.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை 2023 : இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்த – சஞ்சய் மஞ்சரேக்கர்

அதே போன்று பெரிய அளவில் பேசப்பட்ட நான்காவது இடத்தில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 71 பந்துகளில் 85 ரன்கள் குவித்து தனது கம்பேக்கை நியாயப்படுத்தி உள்ளார். மேலும் ஐந்தாவது இடத்தில் களமிறங்கிய கே.எல் ராகுல் 67 பந்துகளில் 55 ரன்கள் குவித்து அசத்தி உள்ளார். இப்படி ரோஹித்தை தவிர்த்து இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் வீரர்களின் ஆட்டம் அமர்க்களமாக இருந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement