1000 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் 11 அதிர்ஷ்டசாலிகள் இவர்கள் தான் – பிளேயிங் லெவன் இதோ

INDvsWI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி கடந்த சில நிமிடங்களுக்கு முன்னர் அகமதாபாத் மைதானத்தில் துவங்கியது. இந்திய அணி விளையாட இருக்கும் இந்த முதலாவது ஒருநாள் போட்டியானது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் 1000-ஆவது ஒருநாள் போட்டி என்பது மிகப்பெரிய வரலாற்று சாதனையாக மாறியுள்ளது.

மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 1000-ஆவது ஒருநாள் போட்டியை விளையாடும் முதல் அணியாகவும் இந்திய அணி சாதனை படைத்திருக்கிறது. இப்படி வரலாற்று கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத மைல்கல்லாக மாறியுள்ள இந்த 1000-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

- Advertisement -

அதன்படி கடந்த தென்னாப்பிரிக்கா தொடரை காயம் காரணமாக தவறவிட்ட ரோகித் சர்மா தற்போது மீண்டும் கேப்டனாக இந்திய அணிக்கு இந்த 1000-ஆவது ஒருநாள் போட்டியில் கேப்டனாக விளையாடுகிறார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணியில் விளையாடும் பிளேயிங் லெவனில் இளம் வீரரான தீபக் கூட அறிமுகமாகியுள்ளார்.

துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விளையாடுகின்றனர். 3-வது வீரராக விராட்கோலி, 4-வது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டும் விளையாடுகிறார்கள். அதேபோன்று மிடில் ஆர்டரில் ஐந்தாவது இடத்தில் சூரியகுமார் யாதவும், ஆறாவது இடத்தில் தீபக் ஹூடாவும் விளையாடுகின்றனர்.

- Advertisement -

ஆல்ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர் 7வது இடத்திலும், ஷர்துல் தாகூர் 8வது இடத்திலும் விளையாடுகின்றனர். மேலும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் விளையாடுகிறார். வேகப்பந்து வீச்சாளராக பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் விளையாடுகின்றனர்.

இதையும் படிங்க : இந்தியாவின் 1000 ஆவது போட்டியில் அறிமுகமாகியுள்ள இளம்வீரர் – செம அதிர்ஷ்டசாலி நீங்க

முன்னதாக நடைபெற்று முடிந்த டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணி பந்துவீச தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement