இந்தியாவின் 1000 ஆவது போட்டியில் அறிமுகமாகியுள்ள இளம்வீரர் – செம அதிர்ஷ்டசாலி நீங்க

Cup
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று முதல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த மூன்று போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில் மட்டுமே நடைபெற உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக ரசிகர்கள் இன்றி இந்த போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

INDvsWI

- Advertisement -

அந்த வகையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கைரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் முதலாவது ஒருநாள் போட்டியில் இன்று விளையாடுகின்றன. இன்னும் சில நிமிடங்களில் துவங்க இருக்கும் இந்தப் போட்டியானது இந்திய அணிக்கு 1000 ஆவது ஒருநாள் போட்டி என்ற வரலாற்று சாதனையுடன் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணிக்காக 26 வயது இளம் வீரரான தீபக் ஹூடா இந்திய அணிக்காக அறிமுக வீரராக விளையாடுகிறார். அவருடைய அறிமுக தொப்பியை போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வழங்கியதால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது உறுதியாகி உள்ளது. கடந்த சில நிமிடங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த டாஸின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டாஸில் வெற்றிபெற்று முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்துள்ளார்.

hooda

இதன் காரணமாக தற்போது இந்திய அணி பவுலிங் செய்ய தயாராகி வருகிறது. இருபத்தி ஆறு வயதான தீபக் ஹூடா கடந்த 2015-ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். பரோடா அணியில் க்ருனால் பாண்டியா தலைமையின் கீழ் விளையாடிய போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தடை செய்யப்பட்ட அவர் ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக தற்போது இந்திய அணிக்கு ஆல்-ரவுண்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்றைய போட்டியில் அவர் மிடில் ஆர்டரில் ஒரு ஆல்ரவுண்டராக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அண்டர் 19 உலககோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசு தொகை அறிவித்த பிசிசிஐ – எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இந்த 1000-ஆவது போட்டியில் இவர் முதல் போட்டியில் அறிமுகமாவது நிச்சயம் அதிர்ஷ்டம் என்றே கூறலாம். இன்றைய போட்டியில் அவர் பேட்டிங், பவுலிங் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் குறிப்பிடத்தக்கது.

Advertisement