நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு

IND-vs-RSA
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே தென்னாபிரிக்க நாட்டிற்கு சென்றடைந்த வேளையில் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய வீரர்கள் தற்போது இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நாளை டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற இருக்கும் முதலாவது ஒருநாள் போட்டியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த உத்தேச பட்டியலை இங்கே நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் அறிமுக வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. அதேபோன்று மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவும், நான்காவது இடத்திலும் ஷ்ரேயாஸ் ஐயரும் விளையாட வாய்ப்புள்ளது. ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கேப்டன் கே.எல் ராகுல் களமிறங்குவார்.

- Advertisement -

ஆறாவது இடத்தில் பினிஷரான ரிங்கு சிங் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களாக ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் களமிறங்குவார்கள். மீதமுள்ள மூன்று இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் விளையாட வாய்ப்பு உள்ளது. அதன்படி நாளைய தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : வசமா மாட்டுனீங்க.. மொத்தமா தலையில் விழப்போகுது.. மும்பையின் தவறை விளாசிய ஆகாஷ் சோப்ரா

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) சாய் சுதர்சன், 3) திலக் வர்மா, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ரிங்கு சிங், 7) அக்சர் பட்டேல், 8) குல்தீப் யாதவ், 9) அர்ஷ்தீப் சிங், 10) ஆவேஷ் கான், 11) முகேஷ் குமார்.

Advertisement