வசமா மாட்டுனீங்க.. மொத்தமா தலையில் விழப்போகுது.. மும்பையின் தவறை விளாசிய ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

ஐபிஎல் 2024 சீசன் முதல் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியாவை சமீபத்தில் டிரேடிங் முறையில் வலுக்கட்டாயமாக வாங்கிய மும்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவுக்கு பதிலாக தங்கள் அணியை வழி நடத்துமாறு நியமித்துள்ளது.

ஆனால் சச்சின் முதல் பாண்டிங் தலைமையில் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வந்த மும்பைக்கு 2013இல் கேப்டனாக பெற்ற முதல் வருடத்திலேயே ரோஹித் சர்மா சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொடுத்தார். அதன் பின் 2020க்குள் மொத்தமாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த அவர் குறுகிய காலத்திலேயே மும்பையை வெற்றிகரமான ஐபிஎல் அணியாக ஜொலிக்க வைத்தார்.

- Advertisement -

வசமா மாட்டுனீங்க:
அதனால் இன்று இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மாவுக்கு தரத்திலும் அனுபவத்திலும் நிகரில்லாத கொஞ்சம் கூட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது மும்பை ரசிகர்களிடமே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்திய வருடங்களாகவே அடிக்கடி காயத்தை சந்தித்து வரும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து மும்பை தவறான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

ஏனெனில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விலகியுள்ள பாண்டியா 2023 உலகக் கோப்பை போன்ற பல்வேறு தொடர்களில் பாதியிலேயே காயமடைந்து வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோகித் சர்மாவை கழற்றி விட்டது தவறு என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இந்த முடிவு மிகவும் கடினமானது. ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியா ஃபிட்டாக இருப்பது மிகவும் முக்கியம்”

- Advertisement -

“ஒருவேளை ஹர்திக் பாண்டியா ஃபிட்டாக இல்லாமல் போனால் அனைத்தும் மும்பை தலையில் விழுந்து விடும். பொதுவாக ஃபிட்டாக இல்லாத வீரரை நீங்கள் கேப்டனாக நியமிப்பது பெரிய முடிவாகும். குஜராத் அணியிலிருந்து வெளியேறிய அவர் மும்பை அணியில் துணை கேப்டனாக இருப்பார் என்று நாம் எதிர்பார்த்த நிலையில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் அணியில் முதல் வருடம் கோப்பையை வென்று 2வது வருடம் ஃபைனல் வரை அழைத்துச் சென்ற அவர் நன்றாகவே கேப்டனாக செயல்பட்டார்”

இதையும் படிங்க: ஒரே நாளில் காணாமல் போன 1.5 லட்சம்.. கோபத்தில் மும்பை ரசிகர்கள் செய்த செயலால் சென்னைக்கு அதிர்ஷ்டம்

“இருப்பினும் மும்பை அணியில் ஏதேனும் தவறு நடந்தால் அவர் தன்னுடைய கையை உயர்த்தி தவறை ஒப்புக்கொண்டு சென்று விடுவார்” என்று கூறினார். அவர் கூறுவது போல பாண்டியா காயத்தை சந்தித்து வெளியேறினால் மும்பை அணி நிர்வாகம் கேப்டனாக ரோகித் சர்மாவை விடுவித்ததை நினைத்து கண்டிப்பாக வருந்தும் என்றால் மிகையாகாது.

Advertisement