ஒரே நாளில் காணாமல் போன 1.5 லட்சம்.. கோபத்தில் மும்பை ரசிகர்கள் செய்த செயலால் சென்னைக்கு அதிர்ஷ்டம்

MI vs CSK
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தங்களின் கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் திணறிய மும்பைக்கு 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே ரோஹித் சர்மா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

அதை தொடர்ந்து 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் சாம்பியன் பட்டங்களை வென்று கொடுத்த அவர் குறுகிய காலத்திலேயே 5 கோப்பைகளுடன் மும்பையை வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைக்க வைத்தார். அதன் காரணமாக இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு முன்னேறிய ரோகித் சர்மா 2023 உலகக் கோப்பையில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

காணாமல் போன 1.5 லட்சம்:
அப்படிப்பட்ட அவரை வெறும் ஒரு ஐபிஎல் கோப்பையை வென்ற பாண்டியாவுக்காக கேப்டன்ஷிப் பதவியில் இருந்து நீக்கியது மும்பை ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் எந்த வகையில் பார்த்தாலும் தரத்திலும் அனுபவத்திலும் ரோகித் சர்மாவுக்கு கொஞ்சமும் நிகரல்லாதவராகவே ஹர்திக் பாண்டியா இருக்கிறார்.

அதனால் கோபமடைந்துள்ள ரோஹித் சர்மா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மும்பை அணியின் முடிவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அத்துடன் நிற்காமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்வதை நிறுத்தி வருகிறார்கள். அதன் எதிரொலியாக டிசம்பர் 15ஆம் தேதி இரவில் இருந்து டிசம்பர் 16ஆம் தேதி காலைக்குள் சுமார் 1.5 லட்சம் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இழந்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக உங்களுடைய 5 கோப்பைகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் அதை பெற்றுக் கொடுத்த ரோஹித் சர்மாவை நன்றி மறந்து நீக்கிய உங்களை மேற்கொண்டு பின் தொடர முடியாது என்ற வகையில் ரசிகர்கள் இந்த கொந்தளிப்பான முடிவை எடுத்துள்ளார்கள் என்றே சொல்லலாம். அதன் காரணமாக தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் அதிக ரசிகர்களை கொண்ட ஐபிஎல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: பாண்டியவை கேப்டனா போட்டு ரோஹித்தை மட்டுமல்ல அவரையும் அவமான படுத்திட்டீங்க – ரசிகர்கள் கொந்தளிப்பு

அதனால் இதுவரை முதல் இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் தற்போது 13 மில்லியனுக்கும் குறைவான ஃபாலோயர்களுடன் 2வது இடத்திற்கு சரிந்துள்ளது. மொத்தத்தில் ரோகித் சர்மா கேப்டன்ஷிப் பதவியிலிருந்து பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. இதனுடைய வெளிப்பாடு 2024 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது களத்தில் நேரடியாக எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement