நாளைய இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-ENG
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தங்களது வெற்றி பயணத்தை ஆரம்பித்த இந்தியா அக்டோபர் 22-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி வரை தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியல் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காத ஒரு அணியாக பார்க்கப்பட்டு வருகிறது. இன்னும் இந்திய அணிக்கு எஞ்சியுள்ள நான்கு போட்டிகளில் ஒன்று அல்லது இரண்டு வெற்றி பெற்றால் கூட அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும்.

- Advertisement -

அதன்காரணமாக இந்திய அணி அந்த ஒரு வெற்றிக்காக தற்போது காத்திருக்கிறது. அந்த வகையில் இந்திய அணி லக்னோ மைதானத்தில் நாளை அக்டோபர் 29-ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளதால் அவர்களை இந்திய அணி எளிதில் வீழ்த்தும் என்றே பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நாளைய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. அந்த வகையில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ஏற்கனவே இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது மிகவும் கச்சிதமாக வெற்றி பெற்றதால் அந்த அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இருப்பினும் லக்னோ மைதானத்தை கணக்கில் கொண்டு ஒரு மாற்றம் மட்டுமே நிகழலாம் என்றும் அதில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்கலாம் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்திய அணியில் முகமது ஷமியையோ அல்லது சிராஜையோ நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக அஸ்வினை சேர்க்கலாம் அதை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நாளைய இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்தியா – இங்கிலாந்து மோதும் லக்னோ மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

1) சுப்மன் கில், 2) ரோஹித் சர்மா, 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) குலதீப் யாதவ், 9) முகமது ஷமி/அஷ்வின், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement