IND vs ENG : நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Rohit-Sharma-IND-Captain
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நேற்றுடன் முடிவடைந்த வேளையில் இந்த ஐந்தாவது போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 7ஆம் தேதி நாளை துவங்க உள்ளது.

Team India Dinesh Karthik Ishan Kishan

- Advertisement -

மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணியை இரண்டு பிரிவாக பிரித்து பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. அதன்படி முதல் டி20 போட்டிக்கு இளம் வீரர்களைக் கொண்ட அணியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகளுக்கு சீனியர் வீரர்களை உள்ளடக்கிய அணியையும் பி.சி.சி.ஐ அறிவித்தது. அதன்படி ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியை தவறவிட்ட கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் டி20 தொடரில் கேப்டன் ஆக செயல்பட இருப்பதால் அவரது தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது இந்த முதலாவது டி20 போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் நாளை துவங்க இருக்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் சமீபகாலமாகவே துவக்க வீரர்களாக களமிறங்கி வரும் ரோகித் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது ஜோடியே நாளைய போட்டியிலும் துவக்க ஜோடியாக களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

Ishan-Kishan-Keeper

அதேபோன்று அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 77 ரன்களை குவித்த சஞ்சு சாம்சன் மூன்றாவது இடத்திலும், நான்காவது இடத்தில் வழக்கம் போல சூரியகுமார் யாதவும் விளையாடுவார்கள். அதே வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வந்தாலும் சமீப காலமாகவே அவர் பவுன்சருக்கு எதிராக படுமோசமாக திணறி வருவது அப்பட்டமாகியுள்ளதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவருக்கு பதிலாக அயர்லாந்து தொடரில் அதிரடி சதம் விளாசிய தீபக் ஹூடாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

அதேபோன்று பின்வரிசையில் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் ஹர்டிக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோருடன் ஆவேஷ் கான் அல்லது உம்ரான் மாலிக் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அதன்படி நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs ENG : இந்தியா இங்கிலாந்து டி20 போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? – எதில் பார்க்கலாம்?

1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) சஞ்சு சாம்சன், 4) சூரியகுமார் யாதவ், 5) தீபக் ஹூடா, 6) ஹார்திக் பாண்டியா, 7) தினேஷ் கார்த்திக், 8) ஹர்ஷல் படேல், 9) புவனேஷ்வர் குமார், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) ஆவேஷ் கான்/உம்ரான் ,மாலிக் (குறிப்பு : இது உத்தேசமாக கணிக்கப்பட்ட அணிதான்)

Advertisement