IND vs ENG : இந்தியா இங்கிலாந்து டி20 போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்? – எதில் பார்க்கலாம்?

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது ஜூலை 1 ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இறுதியாக நிர்ணயித்த 378 ரன்கள் எளிதாக துரத்தி பிடித்த இங்கிலாந்து அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து அணி இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடரானது ஜூலை 7 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்தது.

அதன்படி வெளியான அறிக்கையின் படி முதல் டி20 போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையிலான இளம் இந்திய அணியும், அடுத்த இரண்டு போட்டிகளுக்கு சீனியர் வீரர்களுடன் கூடிய இந்திய அணியும் விளையாடும் என்று அணி வீரர்களின் பட்டியலையும் ஏற்கனவே பி.சி.சி.ஐ வெளியிட்டு இருந்தது.

Team India Dinesh Karthik Ishan Kishan

இந்நிலையில் நாளை ஜூலை ஏழாம் தேதி நடைபெறும் இந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி எப்போது நடைபெறும்? எந்த சேனலில் பார்க்கலாம் என்று குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

- Advertisement -

அதன்படி நாளை ஜூலை ஏழாம் தேதி நடைபெற இருக்கும் முதல் டி20 போட்டியானது இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு துவங்கும் என்றும் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிகள் இரவு 7 மணிக்கு துவங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிரம்மாண்ட வளர்ச்சிக்கு பின்பு ஆரம்பமான மெகா வீழ்ச்சி, விராட் – ரோஹித் கேப்டன்ஷிப் மாற்றம் காரணமா, ஒரு அலசல்

அதோடு இந்த போட்டிகளை சோனி தொலைக்காட்சிகளின் வாயிலாக நேரலையாக கண்டு களிக்கலாம். அது மட்டும் இன்றி சோனி லைவ் என்கிற ஆப்பின் மூலம் போட்டிகளை OTT தளத்தில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement