IND vs BAN : வங்கதேச அணிக்கெதிரான முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

சமீபத்தில் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தற்போது பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

IND-vs-BAN

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை டிசம்பர் 4 (நான்காம் தேதி) நடைபெறவுள்ளது. டாக்காவில் நடைபெற இருக்கும் இந்த முதலாவது ஒருநாள் போட்டியானது நாளை காலை இந்திய நேரப்படி 11.30 மணிக்கு துவங்கும். இந்த ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே டாக்கா சென்றடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சீனியர் வீரர்கள் இணைந்துள்ளதால் நாளைய போட்டியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பாப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நாளைய முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக உத்தேச அணியாக தொகுத்து வழங்கி உள்ளோம்.

Rohit and Dhawan

அதன்படி நாளை போட்டிக்கான இந்திய அணியில் துவக்க வீரர்களாக ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்குவார்கள். மூன்றாவது வீரராக சந்தேகத்திற்கு இடமின்றி விராட் கோலி விளையாடுவார். நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும், ஐந்தாவது இடத்தில் கே.எல் ராகுலும் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோன்று ஆறாவது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விளையாடுவார்.

- Advertisement -

அடுத்ததாக 7 மற்றும் 8 ஆவது இடத்தில் ஆல்ரவுண்டர்களாக அக்சர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விளையாடுவார்கள். மீதமுள்ள 3 இடங்களில் வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சாகர், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்த முதலாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs BAN : இந்தியா வங்கதேச தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய கேப்டன் – புதிய கேப்டன் அறிவிப்பு

1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவான், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ரிஷப் பண்ட், 7) அக்சர் பட்டேல், 8) வாஷிங்டன் சுந்தர், 9) தீபக் சாகர், 10) முகமது ஷமி, 11) முகமது சிராஜ்.

Advertisement