IND vs BAN : இந்தியா வங்கதேச தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய கேப்டன் – புதிய கேப்டன் அறிவிப்பு

IND-vs-BAN
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. அடுத்ததாக தற்போது வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த வங்கதேச தொடரில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் மற்றும் முகமது ஷமி போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டது.

IND-vs-BAN

- Advertisement -

அதேவேளையில் வங்கதேச அணியும் தங்களது சொந்த மண்ணில் விளையாட இருப்பதால் அவர்களது அணி மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையே நாளை டிசம்பர் நான்காம் தேதி துவங்கும் ஒருநாள் தொடரானது டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த இந்தியா வங்கதேச தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த தமீம் இக்பால் நேற்று திடீரென காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார்.

இதன் காரணமாக இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் துவக்க வீரரான லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் முகமதுல்லா காயம் அடைந்தபோது வங்கதேச அணியை வழிநடத்திய லிட்டன் தாஸ் இம்முறை இந்த ஒருநாள் தொடர் முழுவதும் கேப்டனாக அந்த அணியை வழிநடத்த இருக்கிறார்.

Litton-das

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக இருக்கும் வேளையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அனுபவ வீரரும், துணை கேப்டனுமான லிட்டன் தாஸ் இம்முறை கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். இது குறித்து வங்கதேச கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் வெளியான அறிக்கையில் :

- Advertisement -

எங்கள் அணியில் உள்ள அனுபவ வீரர்களில் லிட்டன் தாசும் முக்கியமானவர். அவரால் அணியை தலைமை தாங்கி வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. அதேபோன்று லீடர்ஷிப் குவாலிட்டியும் அவரிடம் இருப்பதினால் இந்த இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு அவரே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு ஐ.சி.சி கோப்பையை வாங்கி தரப்போறவரே அவர்தான் – பிரெட் லீ புகழாரம்

அதேபோன்று தமீம் இக்பாலின் காயம் குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் : எதிர்பாராத விதமாக அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரை அவர் தவற விடுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மிக சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் இந்த தொடரை தவறவிட்டது வருத்தம் தான் என்றாலும் விரைவில் அவர் எங்கள் அணியுடன் இணைவார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement