இந்திய அணிக்கு ஐ.சி.சி கோப்பையை வாங்கி தரப்போறவரே அவர்தான் – பிரெட் லீ புகழாரம்

Lee
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிராக படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது. இந்திய அணி தோனியின் தலைமையில் 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை, 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்றிருந்தது.

IND-Team

- Advertisement -

ஆனால் தோனிக்கு பிறகு வந்த எந்த ஒரு கேப்டனாலும் இதுவரை ஐசிசி தொடரை வெல்ல முடியவில்லை. அந்த வகையில் ஏற்கனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பைகளை தவறவிட்ட வேளையில் அடுத்ததாக ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி எதிர்கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையாவது இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது. அதேபோன்று அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற ஏக்கமும் இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் காணப்படுகிறது.

sky

இந்நிலையில் இந்திய அணி டி20 உலக கோப்பையை நிச்சயம் கைப்பற்றும் என்றும் அதற்கு முக்கிய காரணமாக சூரியகுமார் யாதவ் தான் திகழ்வார் என்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிரெட் லீ தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை சூரியகுமார் யாதவ் ஒரு சூப்பர் ஸ்டார் பிளேயர் போன்று விளையாடி வருகிறார்.

- Advertisement -

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே அவர் விளையாடி வரும் விதம் அபாரமாக உள்ளது. மேலும் எந்த ஒரு பவுலருக்கு எதிராகவும் அவர் விளையாடும் விதம் அச்சமின்றி அசத்தலாக இருக்கிறது. அவர் பேட்டிங் செய்யும்போது அவர் முகத்தில் இருக்கும் சிரிப்பு விலை மதிப்பற்றது.

இதையும் படிங்க : பெர்த் மைதானத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆனது?

என்னை பொறுத்தவரை டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில் நிச்சயம் அவரே அதனை வென்று கொடுத்து ஸ்டார் பிளேயராக இருப்பார். நிச்சயம் அவர் இப்போது ஆடுவதைப் போல எப்போதும் ஆட வேண்டும். அவரது ஆட்டத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் அவர் செய்யக்கூடாது அதுதான் அவருக்கு நான் கொடுக்கும் அறிவுரை என சூரியகுமார் யாதவை பிரெட் லீ புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement