பெர்த் மைதானத்தில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்ட ரிக்கி பாண்டிங் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆனது?

Ponting
- Advertisement -

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் வேளையில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 598 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. பின்னர் தொடர்ந்து விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணி 283 ரன்களை குவித்த வேளையில் ஆல் அவுட் ஆனதால் தற்போது ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

Aus

- Advertisement -

இந்த டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இன்று அதிகாலையில் இருந்தே உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் மைதானத்திலிருந்து வெளியேறினார். பின்னர் பெர்த்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இப்படி ஒரு தகவல் வெளியாகியதும் ரசிகர்கள் மத்தியில் அவரது உடல்நிலை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியின் நெட்வொர்க் பணிகளை செய்து வரும் பாண்டிங் ஸ்டேடியத்தில் இருந்து வர்ணனை செய்து கொண்டிருந்தார்.

Ricky-Ponting

அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மேலும் பாண்டிங்கிற்கு இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 47 வயதான அவர் இன்று மதியம் மதிய உணவிற்காக வர்ணனை பெட்டியில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

அதன் பின்னர் தனது உடல்நிலையில் சற்று வித்தியாசம் தெரியவே அவர் தனது நண்பரும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கரின் காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியான அறிக்கையின்படி தற்போது பாண்டிங் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் அவருக்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று மட்டுமே தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 தொடரிலிருந்து அறிமுகமாகும் புதிய ரூல் – பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவிப்பு, முழு விவரம் இதோ

இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு பிறகு பேசிய ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : பாண்டிங் பூரண உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அவர் நிச்சயம் குணமடைந்து மைதானத்திற்கு திரும்புவார் என அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement