IND vs ENG : 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ -உத்தேச பட்டியல்

Rohit-Sharma-IND-Captain
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேளையில் இரண்டாவதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்று தற்போது தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

INDvsENG

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனெனில் இந்த கடைசி போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் நாளைய மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான அணியில் ஏதாவது மாற்றம் நிகழுமா என்று எதிர்பார்த்து வேளையில் அணியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்றும் இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவன் தான் மூன்றாவது போட்டியில் களமிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Team India Jasprit Bumrah

ஏற்கனவே இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பான வீரர்கள் என்பதாலும் அணியில் பெரிய அளவு மாற்றம் தேவையில்லை என்பதாலும் நிச்சயம் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இதே அணிதான் களமிறங்கும் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

அதோடு இந்த தொடர் முடிந்து கையோடு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் விராட் கோலிக்கு இது கடைசி வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் எவ்வாறு அமையப்போகிறது என்பது அனைவரும் எதிர்பார்க்கவும் உள்ளது. மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸ்சில் பவுண்டரிகளால் அதிக ரன்கள் தெறிக்கவிட்ட டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

1) ரோஹித் சர்மா, 2) ஷிகார் தவன், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) ரிஷப் பண்ட், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஜஸ்ப்ரீத் பும்ரா, 9) முகமது ஷமி, 10) பிரசித் கிருஷ்ணா, 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement