ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 2 ஆவது டி20 போட்டியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே ஜனவரி 11-ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஜனவரி 14-ம் தேதி இந்தூர் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான உத்தேச பிளேயிங் லெவன் பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி நாளைய போட்டியில் நடைபெறும் இருக்கும் முக்கிய இரண்டு மாற்றங்களாக துவக்க வீரர் சுப்மன் கில் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முதல் போட்டியில் விளையாடாத யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் அணிக்குள் வரலாம் என்று தெரிகிறது.

அதேபோன்று தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் போட்டியில் இருந்து வெளியேறிய விராட் கோலி இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியுடன் இணைந்துள்ளதால் திலக் வர்மா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக விராட் கோலி களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த இரண்டு மாற்றங்களை தவிர்த்து இந்திய அணியில் பெரியதாக வேறு எந்த மாற்றங்களும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஆட்டமிழக்காமல் 243 ரன்கள் அடிச்சும் என்ன புண்ணியம்.. புஜாராவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் – விவரம் இதோ

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) விராட் கோலி, 4) ஷிவம் துபே, 5) ஜிதேஷ் சர்மா, 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) அர்ஷ்தீப் சிங், 10) ரவி பிஷ்னாய், 11) முகேஷ் குமார்.

Advertisement