ஆட்டமிழக்காமல் 243 ரன்கள் அடிச்சும் என்ன புண்ணியம்.. புஜாராவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் – விவரம் இதோ

Pujara
- Advertisement -

அண்மையில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. இருப்பினும் அந்த தொடரில் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இல்லாதது முதல் போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்கு காரணமாக அமைந்தது.

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு பொறுமை காத்து ஆட வேண்டும் என்கிற பக்குவம் இளம் வீரர்களிடம் காணப்படவில்லை. அதனை தொடர்ந்து நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியில் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் ரஹானேவை கொண்டு வர வேண்டும் என்றும் மீண்டும் ரசிகர்கள் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

அதற்கு ஏற்றாற்போன்று இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சித் தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக விளையாடிய சத்தீஷ்வர் புஜாரா ஜார்கண்ட் அணிக்கெதிராக அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி 243 ரன்களை ஆட்டமிழக்காமல் அடித்திருந்தார்.

இதன் காரணமாக மீண்டும் அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதோடு இந்திய அணிக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள அனுபவம் கொண்ட இவர் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இன்னும் சில ஆண்டுகள் தேவை என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

ஆனாலும் ரஞ்சி கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இரட்டை சதம் அடித்த புஜாராவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆம் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் நேற்று வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் புஜாராவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரோஹித் – கோலியை அந்த மாதிரி யூஸ் பண்ணா.. வேற லெவலில் விளையாடுவாங்க.. பார்திவ் படேல் கருத்து

அவரது இடத்தில் தொடர்ந்து சுப்மன் கில்லே விளையாடுவார் என்று தெரிகிறது. 35 வயதான புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருவதால் அவருக்கு இந்த முறையும் இடம் அளிக்காதது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கும்.

Advertisement