ரோஹித் – கோலியை அந்த மாதிரி யூஸ் பண்ணா.. வேற லெவலில் விளையாடுவாங்க.. பார்திவ் படேல் கருத்து

Parthiv Patel
- Advertisement -

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்திய அணியில் 2வது போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்த அவர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தனர். அதற்கிடையே ஹர்திக் பாண்டியா தலைமையில் இம்முறை புதிய இளம் அணியை உலகக் கோப்பையில் களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதால் விராட் மற்றும் ரோஹித்தின் டி20 கேரியர் முடிந்ததாக செய்திகள் வெளியாகிறது.

- Advertisement -

மாத்தி யூஸ் பண்ணுங்க:
இருப்பினும் ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோர் காயமடைந்துள்ள சூழ்நிலையில் அனுபவத்தை கருத்தில் கொண்டு அந்த 2 சீனியர்களுக்கு மீண்டும் தற்போது வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதும் ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை துவக்க வீரர்களாக பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக விளையாடிய போட்டிகளில் விராட் கோலி அபாரமாக பேட்டிங் செய்துள்ளார்”

- Advertisement -

“ஆனால் இந்திய அணியில் நீங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் துவக்க வீரராக களமிறங்குவதை பார்க்க கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை தியாகம் செய்ய வேண்டும். இருப்பினும் துவக்க வீரர்களாக களமிறங்குவது விராட் மற்றும் ரோஹித்தின் ஆட்டதுக்கு நன்றாக பொருந்தும். ஏனெனில் இருவரில் யாராவது ஒருவர் நன்றாக செட்டிலானால் கடைசி வரை போட்டியை எடுத்து செல்ல முடியும். டி20 போட்டியில் ஒருவர் நிதானமாக விளையாடுவது அவசியமாகும்”

இதையும் படிங்க: அப்போ எல்லாம் பொய்யா.. இளம் வீரரை பழி வாங்கியதா தேர்வுக் குழு? பிசிசிஐ’யை விளாசும் ரசிகர்கள்

“அந்த வேலையை செய்யும் திறமை இருவரிடமே இருக்கிறது. ரோகித் மற்றும் விராட் ஆகிய இருவருமே விளையாடும் 11 பேர் அணியில் இருக்க வேண்டும். அதை விட அவர்களை நான் துவக்க வீரர்களாக பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார். முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பையில் தேவைப்பட்டால் விராட் மற்றும் ரோகித் ஆகியோரை துவக்க வீரர்களாக களமிறக்கும் திட்டத்தை கையில் வைத்திருப்பதாக பயிற்சியளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement