அப்போ எல்லாம் பொய்யா.. இளம் வீரரை பழி வாங்கியதா தேர்வுக் குழு? பிசிசிஐ’யை விளாசும் ரசிகர்கள்

Ishan Kishan BCCI
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடருக்கு அடுத்ததாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரில் முதல் 2 போட்டிகளில் மட்டும் விளையாடப் போகும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை நேற்று பிசிசிஐ வெளியிட்டது.

அந்த அணியில் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக தேர்வாகியுள்ளனர். அதே போல விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல், கேஎஸ் பரத் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இளம் விக்கெட் கீப்பர் இசான் கிசான் அந்த அணியில் கழற்றி விடப்பட்டுள்ளது தற்போது புதிய சர்ச்சையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது.

- Advertisement -

பழி வாங்கியதா பிசிசிஐ:
ஏனெனில் கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அறிமுகமான இசான் கிசான் ஓரளவு நன்றாக செயல்பட்டார். இருப்பினும் கடந்த மாதம் நிறைவு பெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக அவர் வெளியேறினார். குறிப்பாக கடந்த ஒரு வருடமாக இந்திய அணியுடன் தொடர்ந்து பயணித்த பணிச்சுமையால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட அனுமதி கொடுங்கள் என்று இசான் கிசான் கேட்டுள்ளார்.

அதில் நியாயம் இருந்ததால் பிசிசிஐயும் உடனடியாக அவருக்கு விடுப்பு கொடுத்தது. ஆனால் அந்த இடைவெளியில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு பயணித்து 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டார். அப்படி பொய்யான காரணத்தை சொல்லி நன்னடத்தையின்றி நடந்து கொண்டதால் அதிருப்தியடைந்த பிசிசிஐ ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் இசான் கிசானை கழற்றி விட்டதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

அப்போது இடைவெளியில் இருக்கும் போது ஒரு வீரர் பார்ட்டியில் ஈடுபடக்கூடாது என்று சட்டம் எதுவும் உள்ளதா? என அதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் அனைவரும் நினைப்பது போல் நன்னடத்தை சம்பந்தமாக இசான் கிசான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு முன்பாக ராகுல் டிராவிட் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: அப்பா வேனாம்னு சொன்னாரு.. அம்மாவின் தங்க செயினை வித்து குடுத்தாங்க – யார் இந்த துருவ் ஜூரேல்?

அந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தேர்வாவதற்கு ரஞ்சிக்கோப்பையில் விளையாடி ஃபார்முக்கு திரும்புங்கள் என்று இஷான் கிஷானுக்கு பிசிசிஐ கட்டளையிட்டதாக தெரிகிறது. அதனால் தற்போது ஜார்க்கண்ட் அணிக்காக ரஞ்சிக்கோப்பையில் இசான் கிசான் விளையாட துவங்கியுள்ளார். ஆனாலும் தற்போது அவரை தேர்வுக் குழு மற்றும் பிசிசிஐ இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கழற்றி விட்டுள்ளது. அதனால் கோபமடையும் ரசிகர்கள் ராகுல் டிராவிட் சொன்னது பொய்யா? இடைவெளியில் பார்ட்டிக்கு சென்றது தவறா? அதற்காக இப்படி பழி வாங்குவீர்களா என சமூக வலைதளங்களில் பிசிசிஐ’யை விமர்சித்து வருகின்றனர்.

Advertisement