அயர்லாந்து அணிக்கு எதிரான நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-IRE
- Advertisement -

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாளை ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருப்பதால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பிளேயிங் லெவன் பட்டியலை இங்கே காணலாம்.

அதன்படி நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட வாய்ப்புள்ளது. அதனைத்தொடர்ந்து திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் இடம் பிடிப்பார்கள்.

- Advertisement -

பின்பரிசையில் ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் நான்கு பவுலர்களாக பும்ரா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னாய், பிரசித் கிருஷ்ணா அல்லது முகேஷ் குமார் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : 2023 உ.கோ : இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க, அவர 8வது இடத்துல யூஸ் பண்ணா பிரச்சனை தீந்துடும் – டிராவிட்டுக்கு அஸ்வின் ஐடியா

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சஞ்சு சாம்சன், 4) திலக் வர்மா, 5) ரிங்கு சிங், 6) ஷிவம் துபே, 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) பும்ரா, 9) ரவி பிஷ்னாய், 10) அர்ஷ்தீப் சிங், 11) பிரசித் கிருஷ்ணா (அ) முகேஷ் குமார்.

Advertisement