2023 உ.கோ : இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க, அவர 8வது இடத்துல யூஸ் பண்ணா பிரச்சனை தீந்துடும் – டிராவிட்டுக்கு அஸ்வின் ஐடியா

Ravichandran Ashwin 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. அதில் 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்குகிறது. இருப்பினும் 4 வருடங்கள் கழித்தும் இன்னும் 4வது இடத்தில் விளையாடப்போவது யார் என்ற தெளிவு இல்லாத நிலைமையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்திருப்பதும் விக்கெட் கீப்பராக விளையாடப் போகும் கேஎல் ராகுல் குணமடையாமல் இருப்பதும் இந்திய அணியில் குழப்பத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்தி வருகிறது.

அதே போல 2011 உலகக்கோப்பையில் கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் சர்மா முதல் ஹர்திக் பாண்டியா வரை டாப் 6 வீரர்கள் வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பது மற்றொரு பின்னடைவாக இருந்து வருகிறது. இது போக தரமான டெயில் எண்டர்கள் இல்லாமல் இருப்பது கவலையை ஏற்படுத்துவதாக சமீபத்தில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார். அதாவது நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் தொடரில் 8, 9, 10 ஆகிய இடங்களில் களமிறங்கிய அல்சாரி ஜோசப் போன்ற டெயில் எண்டர்கள் முக்கிய ரன்களை எடுத்து வெற்றிகளில் பங்காற்றினர்.

- Advertisement -

அஸ்வின் ஐடியா:
ஆனால் இந்திய அணியில் அது போல வெற்றியை தீர்மானிக்கக் கூடிய ரன்களை அடிக்கும் டெயில் எண்டர்கள் இல்லை என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ராகுல் டிராவிட் வருங்காலங்களில் பேட்டிங் வரிசையில் ஆழத்தை ஏற்படுத்த முயற்சிப்போம் என கூறினார். இந்நிலையில் இது போன்ற பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ஷார்துல் தாக்கூர் இருக்கிறார் என்று ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தெம்பை கொடுத்துள்ளார்.

அதே சமயம் சஹால், குல்தீப் ஆகிய இருவரும் ஒன்றாக விளையாடினால் அதில் ஒருவரை சிறப்பாக பேட்டிங் செய்யும் அளவுக்கு பயிற்சிகளை கொடுத்து பகுதி நேர பேட்ஸ்மேனாக மாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “உங்களுடைய டெயில் சீக்கிரம் துவங்குவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதனால் தான் நம்பர் 8வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக சில பந்துகளை எதிர்கொண்டு முக்கிய ரன்களை சேர்க்க சர்துல் தாக்கூர் போன்ற ஒருவர் உங்களுக்கு தேவை”

- Advertisement -

“குறிப்பாக 30 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் நீங்கள் 6 விக்கெட்டுகளை இழந்திருக்கும் சமயத்தில் உங்களுக்காக களமிறங்கும் வீரர்கள் அதை வெற்றிகரமாக முடிக்கும் திறமையை கொண்டிருக்க வேண்டும். எனவே உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா தயாராக வேண்டிய புதிர் இது தான். ஒருவேளை சஹால், குல்தீப் ஆகியோர் ஜோடியாக விளையாடும் பட்சத்தில் குல்தீப் யாதவ் 8வது இடத்தில் களமிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என்று கூறினார்.

அதாவது 2 முழு நேர ஸ்பின்னர்களுடன் விளையாடினால் இந்த பிரச்சனை தீர்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கும் அஸ்வின் 8வது இடத்தில் தாக்கூர் போன்ற ஆல் ரவுண்டர் விளையாடுவது சரியானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இருப்பினும் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருடன் 4வது பவுலராக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என்பதால் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கக்கூடிய தாக்கூருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:2024 டி20 உ.கோ : ஒரு சிக்ஸர் கூட அடிக்காம சதமடிக்கும் திறமை கொண்ட அவரோட டி20 கேரியர பத்தி பேச யாருக்கும் தகுதியில்ல – சஞ்சய் பங்கார்

இருப்பினும் அந்த அனைத்து சந்தேகம் மற்றும் குறைகளை விரைவில் துவங்கும் 2023 ஆசிய கோப்பையில் தீர்க்க இந்திய அணி நிர்வாகம் முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகியோர் குணமடைந்து அத்தொடரில் களமிறங்கினால் மட்டுமே 2023 உலகக் கோப்பை அணியை தேர்வு செய்வதில் தெளிவு கிடைக்கும் என்பதால் ஆசிய கோப்பை அணியை அறிவிப்பதில் இந்தியா தாமதம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement