IND vs ZIM : நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

Indian-Team
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை முதல் ஹராரே நகரில் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது ஆகஸ்ட் 22-ஆம் தேதி முடிவடைகிறது. மொத்தம் மூன்று ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து பங்கேற்கவுள்ள இந்த இந்திய அணியில் கே.எல் ராகுல் தலைமையில் 16 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முற்றிலும் இளம்வீரர்களை கொண்டே இந்த இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

INDvsZIM

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் பிளேயிங் லெவனின் இடம்பெறப் போகும் அந்த 11 வீரர்கள் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக உத்தேச அணியாக கணித்து வழங்கியுள்ளோம்.

அதன்படி அனுபவ வீரரான ஷிகார் தவான் மற்றும் கேப்டன் கே.எல் ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. மூன்றாவது இடத்தில் ராகுல் திரிபாதி அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் ஐ.பி.எல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக 3 ஆம் இடத்தில் களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shubman Gill

நான்காவது இடத்தில் சுப்மன் கில்லும், ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதேபோன்று ஆல்ரவுண்டர்களாக ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் தீபக் ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் விளையாடுவார்கள்.

- Advertisement -

மேலும் அணியில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவும், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக தீபக் சாகர், பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. அதன்படி நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs ZIM : ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாக உள்ள – ஐ.பி.எல் நாயகன்

1) கே.எல் ராகுல், 2) ஷிகார் தவான், 3) ராகுல் திரிபாதி, 4) சுப்மன் கில், 5) சஞ்சு சாம்சன் / இஷான் கிஷன், 6) தீபக் ஹூடா, 7) அக்சர் படேல், 8) குல்தீப் யாதவ், 9) தீபக் சாகர், 10) பிரசித் கிருஷ்ணா, 11) முகமது சிராஜ்.

Advertisement