IND vs ZIM : ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாக உள்ள – ஐ.பி.எல் நாயகன்

Rahul-Tripathi
- Advertisement -

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி பகல் 12.45 மணிக்கு துவங்கும் இந்த போட்டிக்காக தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

INDvsZIM

- Advertisement -

முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணியானது ஆசிய கோப்பைக்காக தயாராகி வருவதால் கே.எல் ராகுல் தலைமையிலான இந்திய அணி இந்த ஜிம்பாப்வே தொடரை எதிர்கொள்ள இருக்கிறது. இதன் காரணமாக இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது எவ்வாறு விளையாடப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதன்படி நாளைய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக ஐ.பி.எல் நாயகன் ராகுல் திரிபாதி அறிமுகமாக இருக்கிறார் என்று தெரிகிறது.

tripathi

ஏனெனில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் மூன்றாவது இடத்தில் விளையாடும் திறமையுள்ள வீரராக ராகுல் திரிபாதி பார்க்கப்படுகிறார். ஐபிஎல் தொடர்களில் ஏற்கனவே மூன்றாவது இடத்தில் விளையாடி பழகிய அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் சன் ரைசர்ஸ் அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல போட்டிகளில் தனிநபராக வெற்றியை பெற்று தந்தார்.

- Advertisement -

அதன் காரணமாக அவருக்கு மூன்றாம் இடத்தில் இறங்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அயர்லாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ராகுல் திரிபாதிக்கு அந்த தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நிச்சயம் நாளைய முதல் ஒருநாள் போட்டியில் அவர் இந்திய அணிக்காக அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : IND vs ZIM : 2 இந்திய வீரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ப்ராக்டீஸ் கொடுத்த வி.வி.எஸ் லக்ஷ்மணன் – என்ன விஷயம்?

31 வயதான ராகுல் திரிபாதி 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இதுவரை 76 போட்டிகளில் விளையாடி 1798 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக போட்டிக்கு 28 ரன்கள் அடிக்கும் அவர் ஸ்ட்ரைக் ரேட்டையும் 140-க்கு மேல் வைத்துள்ளதால் நிச்சயம் அவருக்கு நாளைய போட்டியில் மூன்றாவது இடத்தில் இறங்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement