IND vs ZIM : 2 இந்திய வீரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ப்ராக்டீஸ் கொடுத்த வி.வி.எஸ் லக்ஷ்மணன் – என்ன விஷயம்?

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை ஹராரே நகரில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டு ஜிம்பாப்வே சென்று தற்போது தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

INDvsZIM

- Advertisement -

இந்தத் தொடருக்கான இந்திய அணியை கே.எல். ராகுல் கேப்டனாக வழி நடத்துகிறார். அதோடு இந்த தொடரில் பயிற்சியாளரான டிராவிட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு வி.வி.எஸ் லட்சுமணன் இந்த தொடருக்கான பயிற்சியாளராக செயல்பட இருப்பதால் இந்த தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்காக ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய வீரர்கள் தற்போது தீவிரவலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் குறிப்பிட்ட இரண்டு வீரர்களுக்கு மட்டும் லக்ஷ்மணன் ஸ்பெஷல் ப்ராக்டிஸ் அளிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

kl rahul

அதன்படி சமீப காலமாகவே காயத்தால் தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்து சர்வதேச கிரிக்கெட்டில் பல மாதங்களாக விளையாடாமல் உள்ள கே.எல் ராகுல் மற்றும் தீபக் சாகர் ஆகிய இருவருக்கும் லட்சுமணன் ஸ்பெஷல் பிராக்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவர்கள் இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

அதனால் அவர்களுக்கு கூடுதலான நேரம் கொடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதோடு இந்த ஜிம்பாப்வே தொடரில் அவர்களது செயல்பாட்டின் அடிப்படையில் தான் இனிவரும் தொடர்களில் அவர்களின் தேர்வு இருக்கும் என்பதனால் மற்றவர்களை காட்டிலும் கூடுதல் நேரம் ஒதுக்கி லக்ஷ்மணன் அவர்கள் இருவருக்கும் சிறப்பு பயிற்சிகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு நாடுகளுக்காக சதமடித்த 5 வீரர்களின் அரிதான பட்டியல்

எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரராக கே.எல் ராகுல் இடம் பிடிப்பார் என்பதனால் நிச்சயம் இந்த தொடரானது அவருக்கு முக்கியமான ஒரு தொடராக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement