சர்வதேச கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு நாடுகளுக்காக சதமடித்த 5 வீரர்களின் அரிதான பட்டியல்

Dravid
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டில் விளையாடும் அத்தனை வீரர்களும் சர்வதேச அளவில் தங்களது நாட்டுக்காக ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்பதே லட்சியமாக கொண்டிருப்பார்கள். அதற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் கடினமாக முயற்சிகளையும் பயிற்சிகளையும் எடுத்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வீரர்கள் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெறும் போது மிகப்பெரிய கேரியர் அமைத்து நீண்டகாலம் விளையாடி நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அடி எடுத்து வைப்பார்கள். அதிலும் குறிப்பாக ரன்களை குவிக்க வேண்டிய பேட்ஸ்மென்கள் எப்படியாவது சதமடித்து தங்களது நாட்டின் வெற்றிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கும் அத்தனை போட்டிகளிலும் பேட்டிங் செய்வார்கள்.

அந்த வகையில் ஏதோ ஒரு போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு சதமடிக்கும் வீரர்கள் தங்களது லட்சியத்தில் முதல் சாதனையை தொட்டு மேற்கொண்டு விளையாட ஆவலுடன் காத்திருப்பார்கள். ஆனால் விதியின் வலிமையால் ஏதோ ஒரு காரணத்துக்காக மற்றொரு நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை அல்லது தாங்கள் விளையாடிய தாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையை சந்திக்கும் சில வீரர்கள் புதிதாகக் குடியேறும் நாட்டுக்காகவும் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.

- Advertisement -

இருநாடுகளுக்கு சதங்கள்:
அப்படி அரிதினும் அரிதாக மற்றொரு நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெறும் பேட்ஸ்மென்கள் அங்கேயும் தங்களது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி சதமடித்து அசத்துவார்கள். இதுபோன்ற நிகழ்வுகள் அரிதினும் அரிதானது என்ற நிலைமையில் கிரிக்கெட் வரலாற்றில் அது போல 2 நாட்டுக்காக விளையாடி சதத்தை பதிவு செய்த 5 வீரர்களை பற்றி பார்ப்போம்:

5. எட் ஜாய்ஸ்: அயர்லாந்தில் பிறந்து அந்நாட்டுக்காக விளையாடிய இவர் 2001 – 2005 வாக்கில் 758 ரன்களை 84.22 என்ற சராசரி எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து அங்கு அடுத்த 2 வருடங்கள் விளையாடினார். அப்படி இங்கிலாந்துக்காக 17 போட்டிகளில் விளையாடிய அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த முத்தரப்பு தொடரின் போது சதமடித்து 107 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இருப்பினும் 2007 உலக கோப்பைக்குப்பின் இங்கிலாந்துக்காக விளையாடும் வாய்ப்பை இழந்த அவர் மீண்டும் தாயகமான அயர்லாந்துக்கு திரும்பி அடுத்த 7 வருடங்கள் நிலையாக விளையாடி 2151 ரன்களை எடுத்தார். அதில் 5 சதங்களையும் விளாசினார்.

4. மார்க் சாப்மான்: ஹாங்காங் நாட்டில் பிறந்து 16 வயதில் 2011 உலகக் கோப்பை தகுதி சுற்று தொடரில் அறிமுகமான இவர் 2015இல் அமீரகத்துக்கு எதிரான போட்டியில் சதமடித்து 124 ரன்கள் குவித்தார். இருப்பினும் இவரது தந்தை நியூசிலாந்தை சேர்ந்தவர் என்ற நிலைமையில் அதன்பின் அந்நாட்டிற்கு குடிபெயர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி 2018இல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

அப்போது முதல் இதுவரை 20 ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்காக விளையாடி வரும் அவர் கடந்த ஜூலையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் சதமடித்து 101* (75) ரன்கள் விளாசி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய பங்காற்றி இந்த அரிதான பட்டியலில் இடம் பிடிக்கிறார்.

3. இயன் மோர்கன்: அயர்லாந்தைச் சேர்ந்த இவர் 2006இல் தனது தாய் நாட்டிற்காக அறிமுகமாகி முதல் போட்டியிலேயே 99 ரன்களில் அவுட்டானாலும் ஆட்டநாயகன் விருது வென்று வெற்றிபெற வைத்தார். அதன்பின் 6 மாதங்கள் கழித்து கனடாவுக்கு எதிரான போட்டியில் சதமடித்த அவர் 2009இல் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்து அந்நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

அந்நாட்டிற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய இவர் குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சரவெடியாக பேட்டிங் செய்ததுடன் கேப்டனாகவும் அபாரமாக செயல்பட்டு 2019 உலக கோப்பையை வென்று கொடுத்தார். இங்கிலாந்துக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 225 போட்டிகளில் 6957 ரன்களையும் 13 சதங்களையும் அடித்துள்ள இவர் 35 வயதிலேயே சுமாரான பார்ம் மற்றும் காயம் காரணமாக சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

2. கெப்லர் வெசல்ஸ்: தென் ஆப்ரிக்காவில் பிறந்த இவர் தனது 21வயதில் ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்து அங்கு அந்நாட்டிற்காக 3 வருடங்கள் விளையாடினார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்காக 24 போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 1761 ரன்களை விளாசிய அவர் 1985இல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஆனால் 6 வருடங்கள் கழித்து தென்னாபிரிக்கா மீதான தடை நீக்கப்பட்ட போது தாய் நாட்டுக்காக ஓய்விலிருந்து வெளியே வந்து மேற்கொண்டு 3 வருடங்கள் 16 டெஸ்ட் மற்றும் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதங்களையும் அடித்து சொந்த நாட்டுக்காக விளையாடிய பெருமையுடன் ஓய்வு பெற்றார்.

1. ராகுல் டிராவிட்: ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தலா 10000+ ரன்களை குவித்து பொறுமையின் சிகரமாக உலகத்தரம் வாய்ந்த பவுவலர்களையும் திணறடித்து ரசிகர்களால் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் இவர் இந்தியாவுக்காக 48 சதங்களை அடித்துள்ளார். அரிதினும் அரிதாக கடந்த 2003இல் கவுண்டி தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவருக்கு ஸ்காட்லாந்து தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் 12 போட்டிகளில் விளையாடிய அவர் 625 ரன்களை விளாசி அசத்திய போதிலும் எஞ்சிய ஸ்காட்லாந்து அணியினர் சொதப்பியதால் 11 போட்டிகளில் தோல்வியை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் 97 பந்துகளில் அதிரடியாக 120* ரன்களை விளாசி வெற்றிக்காக போராடிய அவர் இந்த அரிதான பட்டியலில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement