IND vs WI : முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

Rohit-IND
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அந்நாட்டு அணிக்கெதிரான நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று ஜூலை 27-ஆம் தேதி முதல் துவங்குகிறது.

IND vs WI T20I

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான முதலாவது போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பே அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது. அந்த வகையில் இந்த முதலாவது ஒருநாள் போட்டியின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறப்போகும் வீரர்கள் குறித்த உத்தேச பட்டியலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதன்படி இந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் துவக்க வீரர்களாக விளையாடப்போவது உறுதி. ஏற்கனவே துவக்க வீரர்களாக அவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர்களே இந்த போட்டியிலும் மாற்றமின்றி ஓப்பனர்களாக களமிறங்குவார்கள்.

அதே போன்று மூன்றாவது இடத்தில் பழக்கம் போல விராட் கோலி விளையாடுவார். 4 ஆவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்குவது உறுதி. ஐந்தாவது இடத்தில் ஹர்டிக் பாண்டியாவும், ஆறாவது இடத்தில் சூரியகுமார் யாதவ் களமிறங்குவார் என்று தெரிகிறது.

- Advertisement -

மேலும் சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர்களாக உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனட்கட் அல்லது முகேஷ் குமார் ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்குவார் என்றும் தெரிகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs WI : ஒரே தொடரில் தல தளபதியாக இரட்டை சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ரோஹித் மற்றும் விராட் கோலி

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) சஞ்சு சாம்சன்/இஷான் கிஷன், 5) ஹர்டிக் பாண்டியா, 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) குல்தீப் யாதவ், 9) உம்ரான் மாலிக், 10) ஷர்துல் தாகூர், 11) ஜெய்தேவ் உனட்கட்/முகேஷ் குமார்.

Advertisement