IND vs PAK : பாக் அணிக்கெதிரான போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்களை செய்த ரோஹித் சர்மா – பிளேயிங் லெவன் இதோ

IND-vs-PAK
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் முக்கிய ஆட்டமானது இன்று செப்டம்பர் 10-ஆம் தேதி கொழும்பு நகரில் சற்று முன்னர் துவங்கியது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற லீக் சுற்று போட்டியின் போது மழை பெய்ததால் போட்டி எந்தவொரு முடிவும் இன்றி கைவிடப்பட்டது. போட்டி முழுவதுமாக நடைபெறாததால் ரசிகர்களும் வருத்தமடைந்தனர்.

எனவே இந்த போட்டியாவது முழுமையாக நடைபெற்று வெற்றி பெறப்போகும் அணி எது? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் சற்று முன்னர் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டு பாகிஸ்தான் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியானது தற்போது முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்த்த வேளையில் இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களை செய்து கேப்டன் ரோகித் சர்மா அதிரடி காட்டி உள்ளார்.

அந்த வகையில் கடந்த நேபாள் அணிக்கு எதிரான போட்டியின் போது தனது குழந்தையின் பிறப்பிற்காக நாடு திரும்பிய பும்ரா மீண்டும் அணிக்குள் வந்துள்ளதால் அவர் பிளேயிங் லெவனில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முகமது ஷமி அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதோடு மற்றொரு மாற்றமாக மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு போட்டியிலுமே விளையாடாத கே.எல் ராகுல் நேரடியாக இந்திய அணிக்குள் வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : உலககோப்பை இறுதிப்போட்டியில் மோதும் 2 அணிகள் இதுதான். இந்தியா கிடையாது – மிட்சல் மார்ஷ் பதில்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) கே.எல் ராகுல், 5) இஷான் கிஷன், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.

Advertisement