IND vs IRE : அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச – பிளேயிங் லெவன் இதுதான்

- Advertisement -

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

IND-vs-IRE

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது டப்ளின் நகரில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி இன்று இரவு 7:30 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பது குறித்த தகவலை இந்த பதிவில் நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

அதன்படி ஏற்கனவே முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளதால் இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் ஒரே ஒரு மாற்றமாக அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக முகேஷ் குமார் அல்லது ஆவேஷ் கான் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bumrah

மேலும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்யும் முனைப்பில் அயர்லாந்து அணியும் களமிறங்க இருப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற இருக்கும் வீரர்களின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : தோனி, ரெய்னா தான் தடையிலிருந்து என்னை காப்பாத்துனாங்க – 2012இல் இந்திய வீரருடன் போட்ட சண்டை பற்றி கம்ரான் அக்மல் ஓப்பன்டாக்

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) திலக் வர்மா, 4) சஞ்சு சாம்சன், 5) ரிங்கு சிங், 6) சிவம் துபே, 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) பிரசித் கிருஷ்ணா, 9) ரவி பிஷ்னாய், 10) பும்ரா, 11) ஆவேஷ் கான்/அர்ஷ்தீப் சிங்.

Advertisement