தோனி, ரெய்னா தான் தடையிலிருந்து என்னை காப்பாத்துனாங்க – 2012இல் இந்திய வீரருடன் போட்ட சண்டை பற்றி கம்ரான் அக்மல் ஓப்பன்டாக்

Kamran Akmal
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் வெற்றி காண்பதற்கு ஆக்ரோஷமாக மோதிக்கொள்வார்கள் என்பதால் இவ்விரு அணிகள் மோதும் போட்டிகள் எப்போதுமே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறும். அதனாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டிகள் ஆஷஸ் தொடருக்கு நிகரான மதிப்புமிக்க உலகப்புகழ் வாய்ந்த தொடராக இருக்கிறது.

Gamutam Gambhir Kamran Akmal IND vs Pak Asia Cup

- Advertisement -

அப்படி இவ்விரு அணிகள் வரலாற்றில் பல தருணங்களில் ஆக்ரோஷமாக மோதிய பல போட்டிகளில் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பேட்டிங், பவுலிங் என்பதையெல்லாம் தாண்டி வாய் வார்த்தைகளில் மோதிய கதைகள் ஏராளமாகும். குறிப்பாக கௌதம் கம்பீர் – சாகித் அப்ரிடி ஆகியோர் களத்திலும் ஓய்வு பெற்ற பின் களத்திற்கு வெளியே சமூக வலைதளங்களிலும் சண்டை போட்டுக்கொண்ட தருணங்களை மறக்க முடியாது. அந்த வரிசையில் கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இருதரப்பு தொடரில் இஷாந்த் சர்மா மற்றும் கம்ரான் அக்மல் ஆகியோர் மோதிக்கொண்டது இன்றும் மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

தடை பண்ணிருப்பாங்க:
அந்த சுற்றுப்பயணத்தில் பெங்களூருவில் நடைபெற்ற டி20 போட்டியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலுக்கு எதிராக பந்து வீசிய இஷாந்த் சர்மா ஒரு சமயத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதுவதற்காக சென்றார். இருப்பினும் அப்போது கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இருவருக்கும் இடையே உள்ளே புகுந்து சண்டையைப் பெரிய அளவில் வராமல் தடுத்து நிறுத்தினார்கள்.

Ishanth

இந்நிலையில் அந்த போட்டியில் இஷாந்த் சர்மா ஒரு மோசமான கெட்ட வார்த்தையால் தம்மை திட்டியதாக தெரிவிக்கும் கம்ரான் அக்மல் அதற்கு தாம் பதிலுக்கு 20 கெட்ட வார்த்தையில் திட்டியதாக வெளிப்படையாக பேசியுள்ளார். அப்படி இருவருக்குமிடையே ஏற்பட்ட பெரிய மோதலை தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் உள்ளே வந்து தடுக்காமல் போயிருந்தால் தமக்கு 2 போட்டிகள் தடை கிடைத்திருக்கும் என தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இஷாந்த் சர்மா என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். குறிப்பாக ஒரு கெட்ட வார்த்தையில் திட்டிய அவருக்கு நான் 20 கட்ட வார்த்தைகளை பதிலடியாக திருப்பிக் கொடுத்தேன். இங்கே நான் உண்மையாக பேசுகிறேன். அந்தப் போட்டியை தொடர்ந்து அகமதாபாத் நகரில் அடுத்த நாள் நடைபெற இருந்த டி20 போட்டிக்காக நாங்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டோம். அப்போது நான் விராட் கோலி, சோயப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தோம். அந்த சமயத்தில் எங்கள் இருவருக்குமிடையே உண்மையாக என்ன நடந்தது என சிலர் கேட்டனர்”

Kamran

“அப்போது அங்கிருந்த இஷாந்த் சர்மா என்னிடம் கெட்ட வார்த்தை பேசியதாக அவர்களிடம் சொன்னார். அதற்கு “நீங்கள் திரும்ப வாங்கிக்கொண்ட கெட்ட வார்த்தைகளுக்கு தகுதியானவர் தான்” என்று அவர்கள் அவரிடம் சொன்னார்கள். அந்தளவுக்கு அது மோசமான தருணமாக அமைந்தது. இருப்பினும் கேப்டன் கூல் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இடையே வந்தனர். அவர்களுக்கு யார் மீது தவறு இருந்தது என்று தெரிந்த காரணத்தால் உடனடியாக நிலைமையை சமாளித்தனர்”

- Advertisement -

“இல்லையெனில் அது இன்னும் மோசமான சண்டையாக மாறியிருக்கும். குறிப்பாக எனக்கு 2 போட்டிகள் தடையுடன் 5 போட்டிகளுக்கான சம்பளம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும். அந்தளவுக்கு அந்த தருணம் மோசமாக இருந்தது” என்று கூறினார். அதாவது ஒரு கெட்ட வார்த்தை பேசிய இஷாந்த் சர்மாவுக்கு 20 கெட்ட வார்த்தைகளை பதிலடியாக கொடுத்ததன் காரணமாக ஒருவேளை இன்னும் சண்டை பெரிதாக மாறியிருந்தால் தமக்கு தடை கிடைத்திருக்கும் என்று கம்ரான் அக்மல் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Raina

இதையும் படிங்க:UAE vs NZ : இந்தியாவை தெறிக்க விடும் நியூசிலாந்தை அசால்ட்டாக அடித்து நொறுக்கிய அமீரக அணி – இரட்டை சரித்திர சாதனை வெற்றி

இருப்பினும் நல்ல வேளையாக தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் உள்ளே புகுந்து அனைத்தையும் சரி செய்து விட்டதாக அவர் கூறியுள்ளார். அப்படி அனல் பறக்க மோதிக்கொள்ளும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அடுத்ததாக 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement