IND vs ZIM : 2 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட நட்சத்திர வீரர் – பிளேயிங் லெவன் இதோ

INDvsZIM
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது ஜிம்பாப்வே நாட்டில் உள்ள ஹராரே நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

INDvsZIM

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சற்று முன்னர் அதே ஹராரே நகரில் துவங்கியது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஜிம்பாப்வே அணியும் விளையாட இருக்கிறது.

இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் போடப்பட்டது. அதன்படி டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் முதல் போட்டியை போன்று இந்த போட்டியிலும் இந்திய அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

Deepak Chahar 1

அதனை தொடர்ந்து இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த போட்டியின் போது மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தீபக் சாஹர் ஆட்டநாயகன் விருது பெற்றிருந்த வேளையில் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் இடம் பிடித்துள்ளார். இந்த ஒரு மாற்றமே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிகழ்ந்துள்ளது. அதன்படி ஜிம்பாப்வே அணிக்கெதிரான 2 ஆவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இன்னும் அவர் என்னதான் செய்யனும். விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய – யுஸ்வேந்திர சாஹல் கூறியது என்ன?

1) ஷிகார் தவான், 2) சுப்மன் கில், 3) இஷான் கிஷன், 4) கே.எல் ராகுல், 5) தீபக் ஹூடா, 6) சஞ்சு சாம்சன், 7) அக்சர் படேல், 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) பிரசித் கிருஷ்ணா, 11) முகமது சிராஜ்

Advertisement