இன்னும் அவர் என்னதான் செய்யனும். விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய – யுஸ்வேந்திர சாஹல் கூறியது என்ன?

Chahal
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ள வேளையில் தனது 71-வது சதத்திற்காக இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சதம் அடிக்காமல் இருந்து வருவதன் காரணமாக அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி சமீப காலமாகவே அவரது பேட்டிங் பார்ம் மோசமான நிலையில் சரிந்திருக்கும் வேளையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Kohli

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கோலிக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து பேட்டி அளித்திருந்த சாஹல் கூறுகையில் : டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி இன்றளவும் 50-க்கும் மேற்பட்ட சராசரியை வைத்துள்ளார்.

அதோடு இரண்டு டி20 உலக கோப்பையில் அவர் இந்திய அணியின் நாயகனாகவும் இருந்துள்ளார். அது மட்டுமின்றி அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர் 70 சதங்கள் விளாசியுள்ளார். இங்கே பிரச்சனை யாதெனில் எல்லா போட்டிகளிலும் விராட் கோலி களமிறங்கினாலே சதம் அடிக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

அதே வேளையில் அவர் அடித்த பல்வேறு 60 ரன்கள், 70 ரன்கள் என அது குறித்து யாரும் பேசுவதில்லை. அவர் இன்றளவும் கிரீசில் இருந்தாலே எந்த ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும் பவுலிங் செய்ய அஞ்சுகிறார்கள் என்று விராட் கோலிக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அது மட்டுமின்றி தற்போது இந்திய அணியில் பல்வேறு கேப்டன்களுக்கு எதிராக விளையாடி வருவது குறித்து பேசுகையில் :

- Advertisement -

இந்திய அணிக்கு எத்தனை கேப்டன்கள் மாறினாலும் எனது பங்களிப்பு என்பது ஒரே மாதிரி தான் இருக்கும். அவர்கள் எப்போதுமே என்னை விக்கெட் எடுக்கும் ஒரு பந்துவீச்சாளராக தான் பார்க்கிறார்கள். என்னை பொறுத்தவரை கேப்டன்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் தான். ஒரு பந்துவீச்சாளருக்கு நல்ல சுதந்திரம் கிடைக்கும்போது அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

இதையும் படிங்க : சவுரவ் கங்குலியிடம் சிபாரிசு செய்து என்னை ஓப்பனராக மாற்றியதே இவர்தான் – மனம்திறந்த சேவாக்

அந்த வகையில் நானும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். சில நேரங்களில் ரோஹித் பையா என்னிடம் இதுதான் நிலைமை நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தெரியாது? ஏதாவது செய்யுங்கள் என்பார். அந்த வகையில் நானும் இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பாக பந்துவீசி வருகிறேன் என யுஸ்வேந்திர சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement