சவுரவ் கங்குலியிடம் சிபாரிசு செய்து என்னை ஓப்பனராக மாற்றியதே இவர்தான் – மனம்திறந்த சேவாக்

Sehwag
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் இந்திய அணிக்காக 1999-ஆம் ஆண்டு அறிமுகமாகி 2013 வரை 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 17,000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள வீரேந்திர சேவாக் உலகின் மிகச்சிறந்த அதிரடி துவக்க வீரர் என்றால் அதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

Sehwag

- Advertisement -

அந்த அளவிற்கு ஓப்பனிங்கில் இறங்கி தனது அதிரடியின் மூலம் உலக அளவில் ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் சேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கிரிக்கெட் சார்ந்த பணிகளையே மேற்கொண்டு வருகிறார். இந்தியா கண்டெடுத்த மகத்தான துவக்க வீரர்களில் ஒருவரான வீரேந்திர சேவாக் தனது கரியரின் ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் தான் விளையாடி வந்தார்.

அதன் பிறகு துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைத்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட டி20 கிரிக்கெட்டை போன்று விளையாடி தனது அதிரடியால் அனைவரையும் வியக்க வைத்தார். இந்நிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுக் கொண்ட சேவாக் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் ஆகியோர் சுவாரசியமான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

Sehwag

அந்த கலந்துரையாடலில் பல்வேறு விஷயங்களை வெளிப்படையாக அவர்கள் இருவரும் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் சோயிப் அக்தர் சேவாக்கிடம் : நீங்கள் துவக்க வீரரானது எப்படி ? யார் கொடுத்த ஐடியா ? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு சுவாரசியமான பதிலை அளித்திருந்த சேவாக் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் தான் அந்த ஐடியாவை கொடுத்தார். நான் ஆரம்பத்தில் இந்திய அணிக்காக விளையாடும்போது மிடில் ஆர்டரில் தான் விளையாடி வந்தேன். ஆனால் என்னுடைய அதிரடியை கண்ட ஜாகீர் கான் தான் அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலியிடம் சென்று சேவாக்கை ஓப்பனிங் இறக்கி விட்டால் வெளுத்து கட்டுவார் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றியை வித்யாசமான ஸ்டைலில் கொண்டாடும் – 5 வீரர்களும் அதன் பின்னணிகளும் இ்தோ

அதன் பிறகே கங்குலி எனக்கு துவக்க வீரராக வாய்ப்புக் கொடுத்தார். 1999 ஆம் ஆண்டு நான் அறிமுகமான போதெல்லாம் மிடில் ஆர்டரில் தான் விளையாடி வந்தேன். அதன் பிறகு கங்குலியின் தலைமையில் தான் எனக்கு துவக்க வீரராக வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement