சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றியை வித்யாசமான ஸ்டைலில் கொண்டாடும் – 5 வீரர்களும் அதன் பின்னணிகளும் இ்தோ

Shikhar Dhawan VIrat Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தனது நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முழு திறமையை வெளிப்படுத்தி முழு மூச்சுடன் போராடுவார்கள். அதில் வெற்றி காண்பதற்காக கடினமான முயற்சிகளுடன் கடினமாக உழைக்கும் வீரர்கள் களத்தில் வெற்றி காணும் போது அதனுடைய உணர்வுகளை ஒருசில செய்கைகளாக வெளிப்படுத்துவார்கள். குறிப்பாக சதமடிக்கும் பேட்ஸ்மென்கள் ஹெல்மெட்டை கழற்றி பேட்டை உயர்த்துவதும் ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுத்த போது அதை பவுலர்கள் கொண்டாடுவதும் வழக்கமான ஒன்றாகும்.

ஆனால் சில வீரர்கள் தங்களது கடினமான உழைப்பின் பரிசாக விக்கெட் அல்லது சதம் போன்ற ஏதாவது முக்கிய தருணங்களில் மற்றவர்களிடமிருந்து தங்களது உணர்வுகளை வித்தியாசப்படுத்திக் காட்டும் வகையில் வித்தியாசமாக வெளிப்படுத்துவார்கள். நாளடைவில் அதுவே ரசிகர்களிடம் பரிச்சயமாகி அதுவே அவர்களது ஸ்டைலாகவும் மாறிவிடும். சில வீரர்கள் அதற்குப் பின்புறம் சில பின்னணி கதைகளையும் வைத்திருப்பார்கள். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் அல்லது சதமடிக்கும் போது வித்தியாசமாக கொண்டாடும் வீரர்களையும் அதற்கு பின் புறத்தில் இருக்கும் காரணங்களையும் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. ஷெல்டன் காட்ரல்: வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இவர் கடந்த 2019 முதல் அந்த அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுக்கும் போதும் பேட்ஸ்மேன்களை பார்த்து சல்யூட் செய்து அனுப்பி வைப்பார்.

ஆரம்பத்தில் திமிராக நடந்து கொள்கிறாரே என்று அவரின் இந்த செய்கையை ரசிகர்கள் விமர்சித்தனர். ஆனால் உண்மையாகவே கிரிக்கெட்டுக்கு முன்பாக ஜமைக்கா இராணுவத்தில் பணியாற்றிய அவர் அதன் நினைவாக ஒரு விக்கெட்டும் எடுக்கும் போது அவ்வாறு செய்வதாக தெரிவித்த பின் அனைத்து ரசிகர்களும் அவரை பாராட்டி அந்த கொண்டாட்டத்தை மனதார ஏற்றுக் கொண்டார்கள்.

- Advertisement -

4. தப்ரிஸ் சம்சி: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் டி20 கிரிக்கெட்டில் டாப் 10 பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டு வருகிறார். பொதுவாகவே சுழல் பந்துவீச்சாளர்கள் மாயாஜாலம் நிகழ்த்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்று கூறுவதற்கு ஏற்றார் போல் விக்கெட்டுகளை எடுத்த பின் இவர் களத்திலேயே ஒருசில மேஜிக்களை செய்து காட்டுவார்.

அதைவிட ஒவ்வொரு விக்கெட் எடுத்த பின் தனது ஷூவை கழற்றி அதை வைத்து போன் பேசுவதை போல் அவர் கொண்டாடியது வித்தியாசமாக இருந்தது. கடந்த 2019இல் இந்திய வீரர் ஷிகர் தவானை அவுட் செய்த போது முதல் முறையாக அவ்வாறு அவர் செய்ததை பார்த்த ரசிகர்கள் தவானை அவமானப்படுத்துவதாக விமர்சித்தனர். ஆனால் தமது கேரியரின் ஆரம்ப காலத்தில் தடுமாற்றங்களின் போது மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் உதவியதை மறக்காமல் விக்கெட் எடுக்கும் போது அதை அவருக்கு போனில் தெரிவிக்கும் வகையிலேயே அவ்வாறு கொண்டாடுவதாக அந்த போட்டிக்கு பின் ராசி வேன் டெர் டூஷன் தெரிவித்தார். நாளடைவில் அதையே அவர் தனது ஸ்டைலாக வைத்துள்ளார்.

- Advertisement -

3. ஹசன் அலி: பொதுவாகவே பாகிஸ்தானில் வெடி குண்டு வெடிப்பது சர்வ சாதாரணம் என்ற நிலைமையில் அந்நாட்டுக்காக விளையாடும் ஆல்-ரவுண்டர் ஹசன் அலி விக்கெட்களை எடுக்கும் போதெல்லாம் தன்னை பேட்ஸ்மேனை காலி செய்த ஒரு வெடிகுண்டாக நினைத்து வெடிக்கும் வகையில் கொண்டாடுவார்.

ஆனால் ஒரு போட்டியில் அதை ரொம்பவும் தீவிரமாக செய்த அவர் அதனாலேயே காயத்தால் வெளியேறியதால் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளானார். அதன் பின் அது போன்ற கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு மருத்துவர் கூறியதாக தெரிவித்த அவர் அவ்வாறு செயல்பட்டால்தான் தமக்கு தாமே உத்வேகம் அடைவதால் அதை தொடர்ந்து செய்து வருவதாக கூறிக்கொண்டு இப்போதும் செய்து வருகிறார்.

- Advertisement -

2. ஷிகர் தவான்: இந்தியாவின் நட்சத்திர இடதுகை தொடக்க வீரர் ஷிகர் தவான் கடந்த பல வருடங்களில் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர். அவுட்டே ஆனாலும் சிரித்துக்கொண்டே மீசையை முறுக்கிக்கொண்டு கெத்தாக நடக்கும் அவரது ஸ்டைல் போலவே களத்தில் பீல்டிங் செய்யும்போது கேட்ச் பிடித்தால் தனது தொடையை தட்டி வானை நோக்கி கையை உயர்த்தி கொண்டாடுவார்.

அந்த ஸ்டைல் ரசிகர்கள் மட்டுமல்லாது விராட் கோலி போன்ற இந்திய வீரர்களிடேயும் மிகவும் பிரபலமானது. ஒரு முறை அந்தக் கொண்டாட்டத்தின் பின்னணி என்னவென்று கேட்டபோது இந்தியாவில் நடைபெறும் பிரபல கபடி தொடரில் சில வீரர்கள் வெற்றி பெறும்போது அவ்வாறு செய்வது தமக்கு மிகவும் பிடித்ததால் அதை தாமும் செய்வதாக ஷிகர் தவான் தெரிவித்தார்.

1. கேஎல் ராகுல்: இந்தியாவில் லேட்டஸ்ட் ரன் மெஷினாக உருவெடுத்துள்ள இவர் கடந்த 2019க்குப்பின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரையும் மிஞ்சும் வகையில் 3 வகையான இந்திய அணியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். அந்த வகையில் பொதுவாக பேட்ஸ்மேன்கள் சதமடிக்கும் போது ஹெல்மெட்டை கழட்டி பேட்டை உயர்த்தி ரசிகர்களின் பாராட்டை பெறுவார்கள்.

ஆனால் இவர் மட்டும் வித்தியாசமாக சதமடித்ததும் பேட், ஹெல்மெட் அனைத்தையும் கழற்றி மைதானத்தில் வைத்து விட்டு பிரபல கால்பந்து வீரரை போல் தனது 2 கையால் காதுகளைப் மூடிக் கொண்டு கண்களையும் சில நொடிகள் மூடி கொண்டாடுவார். அதைப் பற்றிய விவரத்தைக் கேட்ட போது தன் மீதான விமர்சனங்களுக்கு காது கொடுக்காமல் விமர்சனங்களை நிறுத்துவதற்காக அப்படி செய்வதாக ராகுல் தெளிவு படுத்தினார்.

Advertisement