IND vs RSA : என்னங்க இது. முதல் ஒருநாள் போட்டியில் இத்தனை ஒப்பனர்களா? – இதை கவனிச்சீங்களா?

India Dhawan
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று லக்னோ மைதானத்தில் துவங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதலாவது போட்டி இன்று மதியம் 1:30 மணிக்கு துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் லக்னோ நகரில் பெய்த மழை காரணமாக போட்டி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக துவங்கியது.

miller 2

- Advertisement -

பின்னர் மழையின் பாதிப்பு காரணமாக இந்த போட்டியானது தலா 40 ஓவர்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை குவித்தது.

அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த க்ளாஸன் 74 ரன்களையும், டேவிட் மில்லர் 75 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு தற்போது சமூக வலைதளத்தில் ஒரு பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

Ruturaj-Gaikwad

ஏனெனில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இந்த பிளேயிங் லெவனில் டாப் ஆர்டரில் உள்ள 6 பேட்ஸ்மேன்களில் 5 வீரர்கள் துவக்க வீரர்கள் என்பதனால் இந்த தேர்வு சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஷிகார் தவான், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய அனைவருமே துவக்க வீரர்களாக ஏற்கனவே இந்திய அணியில் விளையாடி உள்ளனர்.

- Advertisement -

அவர்களை தவிர்த்து மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே உள்ளார். இப்படி ஒரே அணியில் ஐந்து துவக்க வீரர்களை இடம் பெறச் செய்யலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளையில் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் ராகுல் திரிப்பாதி மற்றும் ராஜட் பட்டிதார் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க : கெயிலையும் மிஞ்சி டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முரட்டு வெ.இ வீரரின் முரட்டு அடி – வீடியோ உள்ளே

ஏனெனில் இத்தனை துவக்க வீரர்களை ஒன்றாக அணியில் களம் இறக்குவதை விட மிடில் ஆர்டரில் விளையாடி பழகிய ராஜட் பட்டிதார் மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகிய இருவரில் ஒருவருக்காக வாய்ப்பு கொடுத்திருக்கலாம் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement