4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – மாற்றங்கள் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி நாளை ராஞ்சி நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஓய்வு காரணமாக விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதேபோன்று கே.எல் ராகுலுக்கும் இன்னும் காயம் குணமடையாததால் அவரும் நான்காவது போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அந்த வகையில் நாளைய போட்டியில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரும் மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார்கள். அவர்களைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் ரஜத் பட்டிதார் மேலும் ஒரு வாய்ப்பை பெறுவார் என்று தெரிகிறது. ஐந்தாவது இடத்தில் சர்பராஸ் கானும், விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேலும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

அவர்களை தொடர்ந்து மூன்று சுழற்பந்து வீச்சாளர்களாக அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அவர்களை தவிர்த்து வேகப்பந்து வீச்சாளர்களாக 10 ஆவது மற்றும் 11 ஆவது இடத்தில் முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளது. அதன்படி இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : நான் எதிர்கொண்ட கஷ்டமான பவுலர்.. அவரோட ஸ்பெஷல் இது தான்.. அஸ்வினை வாழ்த்திய ஏபிடி

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) ரஜத் பட்டிதார், 5) சர்பராஸ் கான், 6) துருவ் ஜுரேல், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) குல்தீப் யாதவ், 10) முகமது சிராஜ், 11) முகேஷ் குமார்.

Advertisement