நான் எதிர்கொண்ட கஷ்டமான பவுலர்.. அவரோட ஸ்பெஷல் இது தான்.. அஸ்வினை வாழ்த்திய ஏபிடி

AB De Villiers 5
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்தை அதற்கடுத்த இரண்டு போட்டிகளில் தோற்கடித்த இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே நான்காவது போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்ற இந்திய அணி தயாராகியுள்ளது.

முன்னதாக ராஜ்கோட் நகரில் நடந்த 3வது போட்டியில் 2 விக்கெட்டுகளை எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற சாதனை படைத்தார். அத்துடன் பேட்டிங்கில் 3000 ரன்கள் பந்து வீச்சில் 500 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற கபில் தேவ் போன்ற யாருமே படைக்காத மகத்தான சாதனையையும் அவர் படைத்தார்.

- Advertisement -

கடினமான பவுலர்:
அப்போட்டியில் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட அவசர நிலைமை காரணமாக பாதியிலேயே வெளியேறிய அவர் மீண்டும் விளையாட வந்தது அனைவரது பாராட்டுக்கள் பெற்றது. இந்நிலையில் தமக்கு சவாலை கொடுத்த பவுலர்களில் ஒருவரான அஸ்வின் 500 விக்கெட்டுகள் எடுத்ததற்காக தென்னாபிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்திய அணிக்கு ஆற்றும் பங்கிற்காக பெரிய பாராட்டுகளை பெறாத அஸ்வின் நல்ல உயரத்துடன் இருப்பது அவருடைய ஸ்பெஷல் என ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது. “என்ன ஒரு அற்புதமான சாதனை. வாழ்த்துக்கள் ஆஷ். நீங்கள் நான் எதிர்கொண்டு விளையாடிய கடினமான பவுலர்களில் ஒருவர். இந்திய அணிக்கு பேட்டிங், பவுலிங் துறையில் சொத்தாக இருக்கக்கூடியவர்”

- Advertisement -

“எப்போதுமே நட்சத்திரமாக இருக்கும் திகழும் அவர் இந்திய அணியில் செய்யும் வேலைக்காக போதுமான பாராட்டுகளை பெறுவதில்லை. அஸ்வினை பொறுத்த வரை ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் அவர் உயரமானவர். எனவே அவருக்கு இயற்கையாகவே வேரியேஷன் மற்றும் பவுன்ஸ் கிடைக்கிறது. தன்னுடைய மணிக்கட்டில் நிறைய மாற்றங்களை செய்யும் திறமையைக் கொண்ட அவர் கேரம் பால், லெக் ஸ்பின் போன்ற அனைத்து விதமான பந்துகளையும் வீசக்கூடியவர்”

“இருப்பினும் துல்லியம், பொறுமை மற்றும் கிரிக்கெட்டை பற்றிய அறிவு ஆகியவை தான் அவருடைய பலமாகும். அவரை அடிப்பதற்கு அழுத்தத்தை போடுவதே சரியான வழியாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து நான்காவது போட்டியிலும் கே.எல் ராகுல், விராட் கோலி, பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றி காணும் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement