IND vs NZ : நியூசிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

INDvsNZ 1
- Advertisement -

இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை நிறைவடைய உள்ள வேளையில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதன்படி ஜனவரி 18-ஆம் தேதி துவங்கும் இந்த ஒருநாள் தொடரானது ஜனவரி 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அவர்கள் வெளியிட்டுள்ள அந்த 16 வீரர்கள் கொண்ட பட்டியலில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹார்டிக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை தவிர்த்து துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இடம் பெற்றுள்ளனர். மேலும் சமீப காலமாகவே அணியில் இடம்பெறாமல் இருந்த சபாஷ் அகமது மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பந்துவீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற்றனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எஸ்.பரத்துக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன்படி இந்த நியூசிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள 16 வீரர்கள் கொண்ட பட்டியல் இதோ :

இதையும் படிங்க : விராட் கோலி 49, 100 சதங்களை ஈஸியா அடிச்சாலும் அதுல சச்சினை மிஞ்சுவது ரொம்ப கஷ்டம் – மஞ்ரேகர் அதிரடி

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) இஷான் கிஷன், 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சூரியகுமார் யாதவ், 7) கே.எஸ் பரத், 8) ஹார்டிக் பாண்டியா, 9) வாஷிங்க்டன் சுந்தர், 10) ஷாபாஸ் அகமது, 11) ஷர்துல் தாகூர், 12) யுஸ்வேந்திர சாஹல், 13) குல்தீப் யாதவ், 14) முகமது ஷமி, 15) முகமது சிராஜ், 16) உம்ரான் ,மாலிக்.

Advertisement