- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நிதீஷ் ரெட்டி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க நிர்வாகம் தான் இந்த விடயத்தில் ஹெல்ப் பண்ணனும் – விவரம் இதோ

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி அங்கு மெல்போர்ன் நகரில் நடைபெற்ற பாக்ஸிங் டே போட்டியில் சதம் அடித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். அதன் காரணமாக அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்து விளையாடியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர்களிலும் அடுத்தடுத்து விளையாடி வருகிறார்.

நிதீஷ் ரெட்டிக்கு நிர்வாகம் தான் ஆதரவு அளிக்கனும் : ராபின் உத்தப்பா

வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக செயல்பட்ட அவர் இந்திய மண்ணில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்திய மண்ணில் கடைசியாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது மோசமான செயல்பாடு தொடர்ந்து இருந்தது. பாண்டியாவுக்கு அடுத்து நட்சத்திர ஆல்ரவுண்டராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் தற்போது சொந்த மண்ணில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அவரால் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் பெரியளவில் கை கொடுக்க முடியவில்லை. இருந்தாலும் இளம் வீரரான அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகளை நிர்வாகம் வழங்கினால் நிச்சயம் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றார். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா அவரை ஜடேஜாவுடன் ஒப்பிட்டு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : ரவீந்திர ஜடீதா தற்போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆனால் அவர் தனது கரியரை ஆரம்பிக்கும் போது டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்திருந்தார். ஆனாலும் ஜடேஜாவிடம் இருக்கும் திறமையை அறிந்த அப்போதைய கேப்டன் எம்.எஸ் தோனி அவருக்கு தொடர்ச்சியாக ஆதரவினை வழங்கி அதிகப்படியான போட்டிகளில் விளையாட வைத்தார்.

- Advertisement -

அதன் காரணமாகவே படிப்படியாக தனது திறனை முன்னேற்றிய ரவீந்திர ஜடேஜா இன்று முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதேபோன்று நிதீஷ் ரெட்டிக்கும் நிர்வாகத்திடம் இருந்து தொடர்ச்சியான ஆதரவு கிடைக்க வேண்டும். ஏனெனில் அவருக்கு தொடர்ச்சியான ஆதரவையும், வாய்ப்புகளையும் வழங்கும் பட்சத்தில் அவர் தனது பங்களிப்பை உணர்ந்து தனது ஆட்டத்தை மெருகேற்றுவார் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : 98/2 டூ 114க்கு அவுட்.. ஃபைனலில் சொதப்பிய இலங்கை.. பாகிஸ்தான் சொந்த மண்ணில் சாதனை வெற்றி

இளம் வீரர்களுக்கு தங்களது கரியரின் ஆரம்பத்தில் நிர்வாகத்திடம் இருந்து ஆதரவு கிடைத்தால் நிச்சயம் அவர்களும் அதை புரிந்து கொண்டு நல்ல முறையில் முன்னேறுவார்கள் என்றும் ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -