INDvsRSA : தமிழக வீரருக்கு இடம். அதோடு மேலும் ஒரு வீரர் அறிமுகம் – 2 ஆவது போட்டியின் பிளேயிங் லெவன்

Dhawan-IND-Team
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ராஞ்சி மைதானத்தில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் கேஷவ் மகாராஜ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி தற்போது தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இரண்டு முக்கிய மாற்றங்களை இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் செய்துள்ளார்.

Sundar-1

அதன்படி காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறிய தீபக் சாகருக்கு பதிலாக மாற்றுவீரராக இந்திய அணியில் இணைந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நேரடியாக இந்த இரண்டாவது போட்டியில் களம் இறக்கப்பட்டுள்ளார். அதோடு கடந்த போட்டியில் விளையாடிய ரவி பிஷ்னோயிக்கு பதிலாக இந்த போட்டிகள் சபாஷ் அகமது அறிமுகமாகிறார்.

- Advertisement -

இதன் காரணமாக இன்றைய போட்டியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடந்த போட்டியில் 3 ஆவது வீரராக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : IND vs SA : தயவு செஞ்சு 2வது தர டீம்’னு சொல்லாதீங்க – இந்தியாவை வெளிப்படையாக பாராட்டும் தெ.ஆ வீரர்

1) ஷிகார் தவான், 2) சுப்மன் கில், 3) இஷான் கிஷன், 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) சஞ்சு சாம்சன், 6) வாஷிங்க்டன் சுந்தர், 7) சபாஷ் அகமது, 8) ஷர்துல் தாகூர், 9) முகமது சிராஜ், 10) ஆவேஷ் கான், 11) குல்தீப் யாதவ்.

Advertisement