நம்மோட பலமே இதுதான். இதுமட்டும் நடந்தா நாம தான் சாம்பியன்ஸ் – ரோஹித்துக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு

Rohit
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டி மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் அந்த பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதுமே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை தோல்வியையே சந்திக்காமல் பயணித்து வருவதால் நிச்சயம் இறுதி போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த முக்கியமான இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் பற்றி பல கருத்துக்கள் பேசப்பட்டு வரும் வேளையில் இந்த இறுதி போட்டியில் இந்திய அணி டாசில் வெற்றி பெற்றால் போட்டியில் வெற்றி பெற்று விடலாம் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் பெரிய பலமாக சேசிங் பார்க்கப்படுகிறது. எனவே நிச்சயம் இந்திய அணி இறுதிப் போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்து விட்டால் வெற்றி உறுதி என்றே கூறலாம். ஏனெனில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த ஒரு அணியிலும் இல்லாத அளவு நமது பந்துவீச்சு கூட்டணி பலமாக உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

- Advertisement -

பும்ரா, முகமது ஷமி மற்றும் சிராஜ் என மூவருமே வேகப்பந்து வீச்சில் அசத்தி வருகின்றனர். அதேபோன்று குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவதால் நிச்சயம் இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தால் வெற்றி உறுதி என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாற்றத்தை சந்தித்து வருவதும், அவர்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் இருந்து வருவதும் இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : விராட், ரோஹித் இல்ல.. அவர் தான் ஆஸியை சாய்க்கப்போகும் இந்தியாவின் கேம் சேஞ்சர்.. கம்பீர் நம்பிக்கை

அதோடு ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சும் இந்த தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதால் நிச்சயம் இந்த விடயங்கள் எல்லாம் இந்திய அணிக்கு சாதகமாக அமையும். ஆனாலும் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணியை ஏளனமாக எடுத்துக் கொள்ளாமல் முறையான கிரிக்கெட்டை இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாடும் பட்சத்தில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வது உறுதி.

Advertisement