விராட், ரோஹித் இல்ல.. அவர் தான் ஆஸியை சாய்க்கப்போகும் இந்தியாவின் கேம் சேஞ்சர்.. கம்பீர் நம்பிக்கை

- Advertisement -

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா மற்றும் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மாபெரும் இறுதி போட்டி வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் சுற்றில் 9 லீக் போட்டிகளிலும் என்று செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்தது.

அந்த வகையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகள் பெற்றுள்ள இந்திய அணியில் அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. மறுபுறம் 5 கோப்பையிலே வென்று ஐசிசி உலகக் கோப்பைகளின் அரசனாக திகழும் ஆஸ்திரேலியா இம்முறை இந்தியாவை வீழ்த்தி 6வது கோப்பையை வெல்வதற்காக தயாராக உள்ளது.

- Advertisement -

இந்தியாவின் சாவி:
இந்த போட்டியில் பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய சீனியர்கள் கடைசி முறையாக அபாரமாக செயல்பட்டு வெற்றியை இந்தியாவின் பக்கம் மாற்றுபவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரோஹித் மற்றும் விராட் கோலியை விட மிடில் ஓவர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் நேர்த்தியாக விளையாடி ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருப்பார் என்று கௌதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதாவது ஷார்ட் பந்துகளுக்கு எதிராக தடுமாறினாலும் சுழலுக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் எப்போதுமே அபாரமாக விளையாடும் திறமையைக் கொண்டுள்ளதை அனைவரும் அறிவோம். மறுபுறம் ஆஸ்திரேலிய அணியில் மிடில் ஓவர்களில் ஆடம் ஜாம்பா மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகிய ஸ்பின்னர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

எனவே அவர்களை ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் கம்பீர இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் என்னை பொறுத்த வரை மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருந்து வருகிறார். ஆரம்பத்திலேயே காயத்தை சந்தித்த அவர் தம்முடைய இடத்திற்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்”

“அந்த நிலைமையில் சிறப்பாக விளையாடி வரும் அவர் நியூசிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் 70 பந்துகளில் (67) சதமடித்தது அபாரமானதாகும். அவர் தான் ஃபைனலில் மேக்ஸ்வெல் – ஜாம்பா ஆகியோரை சிறப்பாக எதிர்கொள்ளப் போகும் இந்தியாவின் சாவியாக இருப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்த உலகக்கோப்பையில் 2 சதங்களுடன் 400க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ள ஸ்ரேயாஸ் ஓவர்களில் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடுவர் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement