உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றத்தை கண்ட இந்திய அணி – எத்தனையாவது இடம் தெரியுமா?

IND
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது தற்போது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகித்துத்துள்ளது. கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பதிவு செய்தது ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

அதன்படி இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக 445 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியானது 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதன் காரணமாக 557 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 122 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியையும் பெற்று சாதனையையும் நிகழ்த்தியது.

- Advertisement -

இதற்கு முன்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்த வேளையில் இந்த வெற்றி அந்த சாதனையை தகர்த்துள்ளது.

இதையும் படிங்க : போட்டியின் பாதியிலேயே சென்னைக்கு பறந்த அஷ்வினுக்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்தது அவர்தான் – ரவி சாஸ்திரி தகவல்

இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் இந்திய அணி முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த பட்டியலில் நியூசிலாந்து அணி 75% முதல் இடத்தை பிடித்திருக்கும் வேளையில் இந்திய அணியானது 59.52% இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement