போட்டியின் பாதியிலேயே சென்னைக்கு பறந்த அஷ்வினுக்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்தது அவர்தான் – ரவி சாஸ்திரி தகவல்

Ravi-Shastri
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்ததோடு சேர்த்து இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது மூன்றாம் நாள் ஆட்டத்திற்கு முன்பாக 500 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த அஸ்வின் வரலாற்று சாதனை நிகழ்த்தி இருந்த வேளையில் போட்டியின் மூன்றாம் நாளான அன்று தனது தாய் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டார்.

- Advertisement -

அதன்காரணமாக போட்டியின் பாதியில் இருந்து விலகி சென்னைக்கு சென்றடைந்தார். அதன் பின்னர் அவரது தாயை மருத்துவமனையில் சந்தித்த அஸ்வின் அதன்பிறகு நான்காம் நாள் ஆட்டத்திற்கு மீண்டு வந்து போட்டியின் கடைசி கட்டத்தில் பந்துவீசி ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

இப்படி போட்டியின் பாதியிலேயே அவர் சென்னை வந்து மீண்டும் ராஜ்கோட் திரும்பியதற்காக தனி விமானத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தான் ஏற்பாடு செய்து தந்துள்ளார் என ரவி சாஸ்திரி நேரலையில் பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

அஸ்வினை வீட்டிற்கு அழைத்துச் செல்லவும், பின்னர் மீண்டும் திரும்ப அழைத்து வருவவும் வாடகை விமானம் ஒன்றை பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா அவருக்காக ஏற்பாடு செய்து தந்திருந்தார். பிசிசிஐ-யிடம் இருந்து இது போன்ற நல்ல விஷயங்கள் நடப்பது இந்திய கிரிக்கெட்க்கு ஆரோக்கியமான ஒரு விடயம்.

இதையும் படிங்க : பாவம்யா 22 வயசு பையன்.. 2 இரட்டை சதங்கள் அடித்தும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் பரிதாப சாதனை

ஏனெனில் வீரர்களின் நெருக்கடியான நேரத்தில் கிரிக்கெட் வாரியம் அவர்களுடன் துணை நிற்க வேண்டியது அவசியம். அந்த வகையில் அஸ்வினின் கடினமான சூழலை புரிந்து கொண்டு அவருக்காக அந்த உதவியை செய்ததற்கு பிசிசிஐக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement