IND vs WI : 90 வருட டெஸ்ட் வரலாற்றில் புதிய சரித்திர சாதனையை நிகழ்த்தி அதிரடி காட்டிய – ரோஹித்-ஜெய்ஸ்வால் ஜோடி

Rohit-and-Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது டிரினிடாட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்தியானது தங்களது முதல் இன்னிங்சில் 438-ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக விராட் கோலி சதமும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய நால்வரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

Kohli

- Advertisement -

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்து நல்ல நிலையில் இருந்தது. இந்நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் துவங்கியதுமே இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது எஞ்சியிருந்த 5 விக்கெட்டுகளையும் சிறிய இடைவெளியில் தவறவிட்டது.

இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதியில் தங்களது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 183 ரன்கள் என்கிற நல்ல முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியானது அதிரடியாக விளையாடி பெரிய இலக்கினை நிர்ணயத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்த முடியும் என்பதை கருத்தில் கொண்டு துவக்கம் முதலே அதிரடி காட்டியது.

Jaiswal-and-Rohit

இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வெகுவிரைவாக முன்னேற தற்போது நான்காம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 281 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியின் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது ஜோடி 98 ரன்கள் குவித்து அசத்தியது. அதுமட்டும் இன்றி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 90 வருட சரித்திர சாதனை ஒன்றினையும் ரோஹித்-ஜெய்ஸ்வால் ஜோடி நிகழ்த்தி காட்டியுள்ளது.

இதையும் படிங்க : IND vs WI : டஃப் கொடுத்த வெ.இ அணியை சுருட்டிய சிராஜ் – தன்னுடைய காபா சாதனையை உடைத்து கபில் தேவுக்கு பின் புதிய பெருமை

அந்த வகையில் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 5.3 பந்துகளில் அதாவது 33 பந்துகளிலேயே 50 ரன்கள் குவித்து அதிரடி காட்டியது. இதன்மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமாக 50 ரன்கள் கடந்த துவக்க ஜோடி என்ற சாதனையை ரோகித் மற்றும் ஜெயிஸ்வால் ஆகியோரது ஜோடி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement