IND vs WI : டஃப் கொடுத்த வெ.இ அணியை சுருட்டிய சிராஜ் – தன்னுடைய காபா சாதனையை உடைத்து கபில் தேவுக்கு பின் புதிய பெருமை

Moahmmed Siraj
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அதைத்தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் துவங்கிய 2வது போட்டியில் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்க வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்ற முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 438 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்த 121 ரன்கள் எடுக்க கேப்டன் ரோகித் சர்மா 80, யசஸ்வி ஜெய்ஸ்வால் 57, ரவீந்திர ஜடேஜா 61, ரவிச்சந்திரன் அஸ்வின் 56 என முக்கிய வீரர்கள் அனைவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவுக்கு பெரிய ரன்கள் குவிக்க உதவினர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன், கிமர் ரோச் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

சுருட்டிய சிராஜ்:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 71 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த தக்நரேன் சந்தர்பால் 33 ரன்களில் ரவீந்திர ஜடேஜா சுழலில் அவுட்டாக அடுத்ததாக வந்த மெக்கன்சி 32 ரன்கள் எடுத்து சவாலை கொடுத்த போது அறிமுக வீரர் முகேஷ் குமார் அவுட்டாக்கினார். அவர்களுடன் மறுபுறம் நங்கூரமாக நின்று இந்தியாவுக்கு சவாலை கொடுத்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 75 ரன்கள் எடுத்திருந்த போது ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் கிளீன் போல்ட்டானார்.

மேலும் ப்ளாக்வுட் 20 ரன்களில் ரவீந்திர ஜடேஜா சுழலில் சிக்கிய போதிலும் அலிக் அதனேஷ் 37 ரன்களும் ஜோஸ்வா டா சில்வா 10 ரன்களும் எடுத்ததால் 208/4 என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாகவே விளையாடிக் கொண்டிருந்தது. ஆனால் அப்போது சில்வாவை கிளீன் போல்ட்டாக்கிய முகமது சிராஜ் அடுத்ததாக வந்த ஜேசன் ஹோல்டரை நீண்ட நேரம் நிற்க விடாமல் 15 ரன்களில் அவுட்டாக்கி அடுத்ததாக வந்த அல்சாரி ஜோசப் 4, கிமர் ரோச் 4, சனான் கேப்ரியல் 0 என டெயில் எண்டர்களை அந்த பெயருக்கு எடுத்துக்காட்டாக பெவிலியன் திரும்பும் அளவுக்கு சீரான இடைவெளிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அதற்கிடையே அலீக் அதனேஷ் 37 ரன்களில் முகேஷ் குமார் வேகத்தில் ஆட்டமிழந்ததால் 208/4 என நல்ல நிலையில் சவாலை கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 4வது நாளின் முதல் ஒரு மணி நேரத்திலேயே 255 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. அந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதிலும் 23.4 ஓவர்களில் 6 மெய்டன் உட்பட 60 ரன்கள் மட்டும் கொடுத்த முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை சாய்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய மிகச் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்து சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் இருக்கும் காபா கோட்டையை தகர்த்து இந்தியா வரலாற்று வெற்றியை பதிவு செய்வதற்கு 5/73 விக்கெட்களை எடுத்து முக்கிய பங்காற்றியதே அவருடைய முந்தைய சிறந்த பந்து வீச்சாகும்.

இதையும் படிங்க:நீங்க நெனைக்குற மாதிரி எந்த பிரச்சனையும் இல்ல. உண்மை இதுதான். தோனி ஜடேஜா மோதல் குறித்து – ராயுடு விளக்கம்

அது போக இப்போட்டி நடைபெறும் குயின்ஸ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்களை எடுத்த 2வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் முகமது சிராஜ் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 1989ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற போட்டியில் கபில் தேவ் 5/58 விக்கெட்களை முதல் வேகப்பந்து வீச்சாளராக எடுத்தார். இதைத் தொடர்ந்து 183 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா அதிரடியாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement