நீங்க நெனைக்குற மாதிரி எந்த பிரச்சனையும் இல்ல. உண்மை இதுதான். தோனி ஜடேஜா மோதல் குறித்து – ராயுடு விளக்கம்

Rayudu-dhoni-jadeja
- Advertisement -

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என்று கூறி தனது பதவியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தித்த வேளையில் மீண்டும் ஜடேஜா தோனியிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இப்படி தனக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு மீண்டும் பறிக்கப்பட்டதால் சென்னை அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தி அடைந்த ஜடேஜா அந்த தொடரின் பாதியிலேயே காயத்தை காரணம் காட்டி வெளியேறியதாக பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

Jadeja

- Advertisement -

அதோடு 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு சென்னை அணியை சமூக வலைதளத்தில் பின்தொடர்வதை நிறுத்திய ஜடேஜா அடுத்ததாக சென்னை அணியில் விளையாட மாட்டார் என்றும் அவர் வேறு ஏதாவது அணிக்கு இடம்பெயர்வார் என்றெல்லாம் பேச்சுகள் இருந்தன. ஆனால் அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2023-ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த 16-ஆவது ஐபிஎல் தொடரில் ஜடேஜா சென்னை அணியில் தான் அணியில் தான் விளையாடுகிறார் என்று நிர்வாகம் உறுதி செய்தது.

அதோடு தோனியும் ஜடேஜா சென்னை அணிக்கு அவசியம் என்பதனால் அவர் கண்டிப்பாக விளையாடுவார் என்றும் தெரிவித்திருந்தார். இப்படி ஜடேஜா மற்றும் தோனிக்கு இடையே பிளவு என்று பேசப்பட்டு வந்தாலும் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் கடைசி இரண்டு பந்துகளில் பவுண்டரிகளை விளாசி வெற்றி பெற வைத்த ஜடேஜா நேரடியாக தோனியை சென்று கட்டித் தழுவினார். இதன் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே எந்தவொரு பிரச்சினையும் இன்றி சுமூகமாகவே உள்ளனர் என்று ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.

Rayudu

இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை அணியில் என்ன நடந்தது? தோனிக்கும் ஜடேஜாவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதா? என்பது எல்லாம் குறித்து முதல் முறையாக சென்னை அணையில் இருந்து ஓய்வு பெற்ற வீரரான அம்பத்தி ராயுடு தெளிவான விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தோனி மீது ஜடேஜா எப்பொழுதுமே அதிருப்தி அடைந்ததில்லை. குறிப்பாக 2022 ஆம் ஆண்டு ஜடேஜா அணியில் இருந்து விலகியதற்கு காரணம் தோனி கிடையாது.

- Advertisement -

அந்த ஆண்டு அவருக்கு சரியாக அமையவில்லை. ஜடேஜா தான் நன்றாக விளையாடவில்லை என்பதை உணர்ந்தார். அதேபோன்று அதேவேளையில் சென்னை அணியின் ஒட்டுமொத்த செயல்பாடுமே மோசமாக இருந்ததால் அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்தார். அதன் பின்னர் காயம் காரணமாகவே அந்த தொடரில் இருந்து வெளியேறினார். அதை தவிர்த்து தோனிக்கும் ஜடேஜாவிற்கும் எந்த பிரச்சினையும் கிடையாது.

இதையும் படிங்க : இது உங்க ஊர்ல நோ-பால் இல்லையா? இந்தியாவுக்காக போராடிய சாய் சுதர்சனை வீழ்த்திய அம்பயர் – ரசிகர்கள் கொந்தளிப்பு

உண்மையில் ஜடேஜா தோனியின் மீது பெரிய அளவில் மரியாதை வைத்துள்ளார். அதேபோன்று இன்று ஜடேஜா இவ்வளவு சாதித்து இருக்கிறார் என்றால் தோனி அதற்கு முக்கிய காரணம். அதே போன்று சென்னை அணிக்கு ஜடேஜா எவ்வளவு அவசியம் என்பதை தோனி உணர்ந்து இருந்தார். இவற்றையெல்லாம் மீறி இம்முறை சென்னை அணி அசத்தலாக செயல்பட்டு கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி என ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement