டி20 உலகக்கோப்பை : இந்திய அணி அரையிறுதிக்கு எளிதில் தகுதி பெற என்ன வழிகள் இருக்கிறது – விவரம் இதோ

IND
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியானது லீக் சுற்றின் முடிவிலேயே அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது வலுவான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

Rohit-Sharma

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றிருந்த இந்திய அணியானது தற்போது வரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் முதல் போட்டியில் பாகிஸ்தான அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது அடுத்ததாக நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இருக்கும் வாய்ப்புகள் என்ன என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் உள்ளது.

VIrat Kohli IND vs PAK.jpeg

அந்த வகையில் நாளை அக்டோபர் 30-ம் தேதி பெர்த் நகரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியானது அதற்கு அடுத்து நவம்பர் இரண்டாம் தேதி பங்களாதேஷ் அணியுடனும், நவம்பர் 6-ஆம் தேதி ஜிம்பாப்வே அணியுடனும் மோத இருக்கிறது.

- Advertisement -

இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே உள்ள வேளையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமெனில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தாலும் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளை இந்திய அணி சாதாரணமாக வீழ்த்தினால் கூட அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். அதே வேளையில் நாளைய தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று விட்டால் கிட்டத்தட்ட இந்திய அணி அரையிறுதிக்கான வாய்ப்பினை உறுதி செய்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : டி20 உ.கோ வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர்களை பதிவு செய்துள்ள டாப் 6 அணிகளின் பரிதாப பட்டியல்

தற்போது வரை இந்த சூப்பர் 12 சுற்று புள்ளி பட்டியலில் இந்திய அணி பங்கேற்றிருக்கும் குழுவில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நாளைய போட்டியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி 6 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட தங்களது வாய்ப்பை உறுதி செய்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement