டி20 உ.கோ வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர்களை பதிவு செய்துள்ள டாப் 6 அணிகளின் பரிதாப பட்டியல்

NED vs Pak
- Advertisement -

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பை முறையாக வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் கோலாகலமாக துவங்கி எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக டி20 கிரிக்கெட்டில் குறிப்பாக பேட்டிங் துறையில் எந்த இடத்திலும் சுணக்கம் காட்டாமல் அதிரடி சரவெடியாக செயல்பட்டு 200 ரன்களை குவிப்பதே வெற்றியின் முதல் படி என்பார்கள். ஆனால் அதற்கு தடையாக எதிரணியைச் சேர்ந்த தரமான பவுலர்கள் கடுமையான சவாலை கொடுப்பார்கள் என்பதால் அனைத்து போட்டிகளிலும் 200 ரன்களை தொடுவது கடினமாகும். அதனால் 150 – 160 ரன்களை எடுப்பது வெற்றிக்கு போராடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில் சில போட்டிகளில் எதிரணியின் பந்து வீச்சு எரிமலையாக இருந்தால் 100 ரன்களைக் கூட தாண்ட முடியாத பரிதாப நிலை ஏற்படும்.

அதிலும் எதிரணியில் உலகத்தரமாய்ந்த பவுலர்கள் இருந்து பிட்ச் கொஞ்சம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் பந்தை தொட முடியாத அளவுக்கு விக்கெட்டுகளை மடமடவென இழந்து குறைவான ஸ்கோர்களை எடுக்க வேண்டிய பரிதாப நிலையும் சில அணிகளுக்கு ஏற்படும். மேலும் உலக கோப்பையில் சில தருணங்களில் பலமான அணிக்கு எதிராக கத்துக்குட்டியாக கருதப்படும் அணிகள் தரமான பந்து வீச்சில் சரணடைவதும் வழக்கமாகும். அந்த வகையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணிகளை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

6. அயர்லாந்து 68: கடந்த 2010ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து 138/9 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய அயர்லாந்து வெஸ்ட் இண்டீசின் தரமான பந்து வீச்சில் 16.4 ஓவரில் வெறும் 68 ரண்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக டேரன் சம்மி மற்றும் ரவி ராம்பால் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

5. ஸ்காட்லாந்து 60: கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சார்ஜாவில் நடந்த ஒரு போட்டியில் ஸ்காட்லாந்தை புரட்டி எடுத்த ஆப்கானிஸ்தான் 190/4 சேர்த்தது. ஆனால் அதை துரத்திய ஸ்காட்லாந்து முஜிபுர் ரகுமான் 5 விக்கெட்டுகளையும், ரசித் கான் 4 விக்கெட்டுகளையும் எடுத்து மிரட்டிய மாயாஜால சுழல் பந்து வீச்சில் 10.2 ஓவரில் வெறும் 60 ரன்களுக்கு சுருண்டு மோசமாக தோற்றது.

- Advertisement -

4. நியூஸிலாந்து 60/9: கடந்த 2014ஆம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நியூசிலாந்தின் தரமான பந்து வீசில் 19.2 ஓவரில் வெறும் 119 ரன்களுக்கு சுருண்டது. ஆனால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து ரங்கனா ஹெரத் 5 விக்கெட்களை எடுத்து வீசிய மாயாஜால சுழலில் சிக்கி 15.3 ஓவரில் கடைசி பேட்ஸ்மேன் காயமடைந்ததால் 60/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

3. வெஸ்ட் இண்டிஸ் 55: கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்தின் அடில் ரசித் 4 விக்கெட்டுகளையும் மொயின் அலி 2 விக்கெட்களையும் எடுத்த அற்புதமான சுழலில் சிக்கி 14.2 ஓவரில் வெறும் 55 ரன்கள் பரிதாபமாக சுருண்டு பின்னர் 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

2. நெதர்லாந்து 44: கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சார்ஜாவில் லகிரு குமாரா 3 விக்கெட்டுகள், வணிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகள், மஹீஷ் தீக்சனா 2 விக்கெட்கள் எடுத்து தரமாக பந்து வீசிய இலங்கையிடம் சரணடைந்த நெதர்லாந்து 10 ஓவர்களில் வெறும் 44 ரன்களுக்கு சுருண்டு பின்னர் 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.

1. நெதர்லாந்து 39: அதற்கு முன்பாகவே கடந்த 2014ஆம் ஆண்டு சிட்டகாங் நகரில் அஜந்தா மெண்டிஸ் 3 விக்கெட்டுகள் ஏஞ்சலோ மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் லசித் மலிங்கா 2 விக்கெட்டுகள் எடுத்ததால் இலங்கையிடம் தாக்குப் பிடிக்க முடியாத நெதர்லாந்து 10.3 ஓவரில் வெறும் 39 ரன்களுக்கு சுருண்டு டி20 உலக கோப்பை வரலாற்றில் மிகவும் குறைந்தபட்ச கோரை பதிவு செய்து பரிதாப உலக சாதனை படைத்தது.

Advertisement